முகப்பு /செய்தி /விளையாட்டு / ''இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா'' : தேர்வுக்குழு தலைவர் புகழாரம்

''இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா'' : தேர்வுக்குழு தலைவர் புகழாரம்

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். வீரர்கள் நலன் கருதி ஒவ்வொரு வீரர்களுக்கும் நாங்கள் ஓய்வு கொடுப்போம். - தேர்வுக்குழு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறியதாவது-

ரோஹித் சர்மாவின் திறமை மீது தேர்வுக்குழு நம்பிக்கை வைத்துள்ளது. இன்றைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா உள்ளார். டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் என அனைத்து ஃபார்மேட்டுகளிலும் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது.

அவரைப் போன்ற ஒரு வீரரை கையாளுவது என்பது எங்களுக்கு சவாலான காரியம். இன்றைக்கு அவர் இந்திய அணியை வழி நடத்தவுள்ளார். அவரைப் போன்று மற்ற சிறந்த வீரர்களையும் கண்டுபிடித்து, வழிநடத்தும் பொறுப்பை அவர்களிடம் வழங்க வேண்டும். ரோஹித்தின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது.

இதையும் படிங்க - இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்... ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிப்பு

எதிர்காலத்தில் என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. தற்போதைக்கு ரோஹித் சர்மா நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். வீரர்கள் நலன் கருதி ஒவ்வொரு வீரர்களுக்கும் நாங்கள் ஓய்வு கொடுப்போம்.

டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கேப்டனாக ரோஹித்தின் பெயரை அறிவிப்பதில் எங்களுக்கு எந்த குழப்பமும் ஏற்படவில்லை. அவர் மிகச்சிறந்த தேர்வாக நாங்கள் கருதுகிறோம். நீண்ட காலத்திற்கு அவர் இந்திய அணியை வழிநடத்தினால் அது மிகச்சிறந்த ஒன்றாக அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க - ‘எண்ட் கார்டு போட்டு எகத்தாளமா பண்றீங்க? எனக்கு எண்டே கிடையாது’- ரஞ்சியில் சதமெடுத்த ரஹானே மைண்ட் வாய்ஸ்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் :

ரோஹித் சர்மா (கேப்டன்), பிரியங்க் பஞ்சால், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), KS பரத், ஆர் ஜடேஜா, ஜெயந்த் யாதவ், ஆர் அஷ்வின், குல்தீப் யாதவ், சௌரப் குமார், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்).

இலங்கைக்கு எதிரான டி20 போட்டித் தொடர் இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், புவனேஷ்வர் சிராஜ், , ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா(துணை கேப்டன்), அவேஷ் கான்.

First published:

Tags: India Cricket