இந்திய அணியில் யார் உள்ளே? யார் வெளியே?

India's likely playing XI for 1st ODI | இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜன.12) தொடங்க உள்ளது. #AUSvIND

Web Desk | news18
Updated: January 11, 2019, 7:31 PM IST
இந்திய அணியில் யார் உள்ளே? யார் வெளியே?
இந்திய கிரிக்கெட் அணி. (File)
Web Desk | news18
Updated: January 11, 2019, 7:31 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியில் யாரெல்லாம் இடம்பெற வாய்ப்புள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 விதமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

அண்மையில், நடந்து முடிந்த 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது.

Indian cricket team, இந்திய கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது. (Image: AP)


இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை (ஜன.12) தொடங்க உள்ளது. ஒருநாள் தொடருக்கு தயாராவதற்காக இந்திய அணி வீரர்கள் சிட்னி மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

Indian Team Practice, இந்திய அணி வலைப்பயிற்சி
அனல் பறக்கும் வலைப்பயிற்சியில் இந்திய வீரர்கள். (BCCI)


இந்நிலையில், உத்தேச இந்திய லெவன் அணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நீண்ட இடைவெளிக்குப்பின் அணிக்கு திரும்பியுள்ள ஷிகர் தவான், ரோகித் சர்மா உடன் தொடக்க வீரராக களமிறங்குவார்கள். 3-வது வீரராக கேப்டன் விராட் கோலியும், 4-வது வீரர் அம்பதி ராயுடுவும் இருப்பார்கள்.
Loading...
Shikar Dhawan, Ambati Rayudu, தவான், அம்பதி ராயுடு
நீண்ட இடைவெளிப்பின் அணியில் இடம்பிடித்த ஷிகர் தவான், அம்பதி ராயுடு ஆகியோரும் பயிற்சியில் ஈடுபட்டனர்.


5-வது வீரராக விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் தோனி இறங்குவார் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு அடுத்த இடங்களில்தான் சில முரண்பாடுகள் உள்ளன. தடைவிதிக்கப்பட்ட ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஜடேஜா வரலாம். ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் இல்லையென்றால் மற்றொரு விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் இருவரில் ஒருவருக்குதான் வாய்ப்புள்ளது.

Dhoni Practice, தோனி பேட்டிங் பயிற்சி
தொடர்ந்து 2-வது நாளாக தோனி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்.
(BCCI)


வேகப்பந்து பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி மற்றும் கலீல் அகமது ஆகியோர் கூட்டணி இருக்கும். ஷமி உட்கார வைக்கப்பட்டால் முகமது சிராஜ்-க்கு வாய்ப்புக் கிடைக்கலாம். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் கண்டிப்பாக இருப்பார். ஜடேஜா வருகையால் சாஹல் இடம்பெற வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

உத்தேச இந்திய லெவன் அணி: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, கலீல் அகமது, குல்தீப் யாதவ்.

Photos: அனல் பறக்கும் வலைப்பயிற்சியில் இந்திய அணி!

Also Watch...

First published: January 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...