சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்வான இந்தியர்!

அவர், தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் முதல் பெண் ரெஃப்ரியாகத்(referee) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று ஐ.சி.சி வெளியிட்டது.

news18
Updated: May 14, 2019, 6:18 PM IST
சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்வான இந்தியர்!
ரெஃப்ரி
news18
Updated: May 14, 2019, 6:18 PM IST
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முதல் பெண் ரெஃப்ரியாக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லெட்சுமி தேர்வாகியுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லெட்சுமிக்கு வயது 51. அவர்,  பெண் கிரிக்கெட் வீரராகவும் இருந்துள்ளார். அவர், 2008-2009-ம் காலகட்டத்தில் உள்நாட்டு பெண்கள் போட்டியில் 3 ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.

அவர், தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் முதல் பெண் ரெஃப்ரியாகத்(referee) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று ஐ.சி.சி வெளியிட்டது.

சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் ரெஃப்ரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசிய ஜி.எஸ்.லெட்சுமி, ‘ஐ.சி.சியின்குழுவில் என்னைத் தேர்ந்தெடுத்தது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவமாக கருதுகிறேன். நான், நீண்ட காலமாக கிரிக்கெட் வீரராக இருந்துள்ளேன். மேலும், மேட்ச் ரெஃப்ரியாகவும் இருந்துள்ளேன். சர்வேதச அரங்கில் பணியாற்றுவதற்கு என்னுடைய விளையாட்டு வீரர் அனுபவமும், ரெஃப்ரியாக இருந்த அனுபவமும் உதவும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Also see:

First published: May 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...