நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 208 ரன்கள் எடுத்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் 24 வருட சாதனையை சுப்மன் கில் தகர்த்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக தனிநபர்கள் எடுத்த அதிகபட்ச ரன்னாக 186 ரன்கள் இருந்தது. இதனை 1999-ல் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அடித்திருந்தார். இந்நிலையில் 24 வருடங்களுக்கு பிறகு சச்சினினின் இந்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ ஹேடன் 181 ரன்களும், கேலகன் 169 ரன்களும் முன்னாக எடுத்திருந்தனர். இவை அனைத்தையும் சுப்மன் கில் இன்று முறியடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் மிக இளம் வயதில் 200 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையையும் சுப்மன் கில் இன்று ஏற்படுத்தியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக ஐதராபாத்தில் இன்று நடந்த போட்டியில் 149 பந்துகளை எதிர்கொண்ட அவர் 208 ரன்கள் எடுத்து இந்த சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இதே சாதனையை வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் இஷான் கிஷன் ஏற்படுத்தியிருந்தார். இதனை 23 வயதாகும் சுப்மன் கில் முறியடித்துள்ளார். இஷான் கிஷன் 24 வயதில் இந்த சாதனையை ஏற்படுத்தினார்.
இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் 24 இன்னிங்ஸ்களில் விளையாடி 1000 ரன்களை கடந்துள்ளனர். இந்த சாதனையை சுப்மன் கில் 19 இன்னிங்ஸ்களிலேயே கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணியின் விராட் கோலி, இஷன் கிஷன், ஹர்திக் பாண்ட்யா சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் இன்று ஏமாற்றம் அளித்தனர். ஆனால் தொடக்க வீரராக களத்தில் இறங்கிய சுப்மன் கில் மிக அற்புதமாக விளையாடி இரட்டை சதம் விளாசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket