முகப்பு /செய்தி /விளையாட்டு / இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ்... இந்திய அணி செய்த மோசமான சாதனை!

இங்கிலாந்திடம் ஒயிட்வாஷ்... இந்திய அணி செய்த மோசமான சாதனை!

இந்திய அணி தோல்வி. (EnglandCricket)

இந்திய அணி தோல்வி. (EnglandCricket)

#Indianwomenteam's longest losing streak in #T20Is following #whitewash | இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை 0-3 என இந்தியா முழுவதுமாக இழந்தது.

  • Last Updated :

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை முழுவதுமாக இழந்து ஒயிட்வாஷ் ஆன இந்திய மகளிர் அணி, மோசமான சாதனையைச் செய்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி நேற்று (மார்ச் 9) கவுகாத்தியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்தது.

Smriti Mandhana, ஸ்மிரிதி மந்தனா
சதம் அடித்த ஸ்மிரிதி மந்தனா. (EnglandCricket)

120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. கேப்டனும், தொடக்க வீராங்கனையுமான ஸ்மிரிதி மந்தனா அதிரடியாக 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு முனையில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் பொறுமையாக விளையாட, மற்றவர்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிபெற 3 ரன் மட்டுமே தேவைப்பட்டது. மிதாலி ராஜ் மறுமுனையில் மாட்டிக்கொண்டார். அதனால், ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் இறுதியில், இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம், டி-20 தொடரை 0-3 என இந்தியா முழுவதுமாக இழந்தது.

India vs England
இங்கிலாந்து மகளிர் அணி. (ICC)

தொடர்ந்து ஏழு டி-20 போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான சாதனையை இந்திய மகளிர் அணி செய்துள்ளது. இதற்குமுன், 2016-ல் தொடர்ந்து ஆறு டி-20 போட்டிகளில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்திருந்தது.

கோலிக்கு எப்படி பவுலிங் போட வேண்டும்? ஆஸி. பவுலர்களுக்கு வார்னே அட்வைஸ்!

Also Watch...

First published:

Tags: India Vs England, Indian women cricket