• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மகளிர் டி-20 உலகக் கோப்பை: முதல்ஆளாக அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா

மகளிர் டி-20 உலகக் கோப்பை: முதல்ஆளாக அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா

பெண்கள் அணி

பெண்கள் அணி

  • Share this:
    மகளிர் டிவென்டி-20' உலக கோப்பைத் தொடரின் அரையிறுதிக்கு இந்தியப் பெண்கள் அணி முன்னேறியுள்ளது. லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 4 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் முதன் அணியாக அரை இறுதியில் நுழைந்துள்ளது இந்தியா.

    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான 'டிவென்டி-20' உலக கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது. மெல்போர்னில் நடந்த 'ஏ' பிரிவிற்கான லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தது.

    இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அதிரடி வீரங்கணை மந்தனா 11 ரன்களில் ஆட்டமிழந்து தொடக்கத்திலேயே ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து நியூசிலாந்தின் ரோஸ்மேரி பந்துவீச்சில் தனியா 23 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 10 ரன்களிலும் அவுட்டாகினர். கேப்டன் ஹர்மன்பிரீத், வேதா ஆகியோர் முறையே 1 மற்றும் 6 ரன்களில் ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர்.

    நியூசிலாந்து


    ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ச்சியாக வீழ்ந்தாலும் மறுபுறம் தொடக்க வீராங்கணை ஷபாலி வர்மா 46 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்தார். முடிவில் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது.

    நியூசிலாந்து அணிக்கு தொடக்கத்தில் ராகெல் 10 ரன்கள், கேப்டன் சோபி டிவைன் 14 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். சுஜீ பேட்ஸ் 6 ரன்கள் மட்டும் எடுத்தார். ராதா யாதவ் 'சுழலில்' கேட்டி 25 ரன்களில் அவுட்டானார். அமெலியா கெர் பவுண்டரியாக விளாசி நெருக்கடி தந்தார். ஷிகா பாண்டே வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் நியூசிலாந்து வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இதில் ஜென்சன் 11 ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. முடிவில் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.

    முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா, வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், 'ஏ' பிரிவில் மூன்று போட்டியிலும் வென்றுள்ள இந்திய அணி 6 புள்ளியுடன் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: