Home /News /sports /

53 பந்துகளில் 79 விளாசிய ஸ்மிருதி மந்தனா-இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

53 பந்துகளில் 79 விளாசிய ஸ்மிருதி மந்தனா-இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அதிரடி காட்டினார். அவர் 53 பந்தில் 13 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி டி20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் முதல் டி20-யில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றது. டெர்பியில் நடந்த 2வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து மகளிர்  அணி 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கெம்ப் அதிரடியாக ஆடி 37 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுச்சர் 34 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்தின் டாப் 3, சோபியா டன்க்லி, டேனி வியாட், ஆலிஸ் காப்சி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பிரையோனி ஸ்மித், ஆமி ஜோன்ஸ் முறையே 16, 17 எடுத்து ராணா பந்தில் வெளியேற இங்கிலாந்து 54/5 என்று சரிவின் பிடியில் இருந்தது அப்போது கெம்ப் அதிரடி ஆட்டம் காட்ட பவுச்சர் 34 ரன்கள் எடுக்க இங்கிலாந்து 142/6.

    இந்திய பெண்கள் அணி சார்பில் ஸ்னே ரானா 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 20 ரன்னிலும், ஹேமலதா 9 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அதிரடி காட்டினார். அவர் 53 பந்தில் 13 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 29 ரன்கள் எடுத்துள்ளார். இறுதியில், இந்திய பெண்கள் அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    Read more: கோலியை ரிட்டையர் ஆகச்சொல்ல நீ யார்?- ஷாகித் அப்ரீடிக்கு வலுக்கும் எதிர்ப்பு

    இதன்மூலம் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன. இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி செப்டம்பர் 15 அன்று நடைபெறுகிறது.
    Published by:Srilekha A
    First published:

    Tags: England, Indian women cricket, Women Cricket

    அடுத்த செய்தி