அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி செல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கு நாளை தொடங்கவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இரண்டிலுமே இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா செல்வதற்கான வாய்ப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து இந்த போட்டியை ஐசிசி நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 2021- இல் நடந்த டெஸ்ட் உலக கோப்பை இறுதி போட்டியில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தியா – வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியை நேரலையாக எதில் பார்க்கலாம்? விபரம் இதோ…
இதன் பின்னர் அடுத்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், எந்த 2 அணிகள் அதிகமான வெற்றி சதவீதத்தை பெற்று இருக்கிறதோ, அந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி முதலிடத்தில் ஆஸ்திரேலியாவும் 2ஆம் இடத்தில் தென்னாப்பிரிக்காவும், 3ஆம் இடத்தில் இலங்கையும், 4வது இடத்தில் இந்தியாவும், 5ஆவது இடத்தில் இங்கிலாந்தும், 6ஆவது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் இழந்துள்ளதால் அந்த அணி பின்னுக்கு சென்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகக்கோப்பை டெஸ்ட் போட்டியின் ஃபைனலுக்கு தகுதிபெற, இந்தியா வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். இதேபோன்று உள்ளூரில் நடக்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகளில் ஒன்றில் கூட தோற்க கூடாது என்ற கட்டாயம் இருந்தது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட்… களத்தில் இறங்கும் இந்திய வீரர்கள் யார்?
ஆனால் அந்த நிலைமை தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருப்பதால் மாறியுள்ளது. அதாவது பாகிஸ்தானின் தோல்வியால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் இந்தியா உலக கோப்பை டெஸ்ட் தொடரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றுவிடும்.
அந்த வகையில் நாளை தொடங்கவுள்ள வங்கதேசத்திற்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது. பாதிக்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில், வெற்றி பந்து வீச்சாளர்களின் கையில்தான் இருக்கும். அந்த வகையில் வலுவான பவுலிங் யூனிட்டுடன் இந்திய அணி நாளை களத்தில் இறங்கும் என்றே எதிர்பார்க்கலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.