ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்து கே.எல். ராகுல் முக்கிய அப்டேட்…

ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்து கே.எல். ராகுல் முக்கிய அப்டேட்…

ரோஹித் சர்மா - கே.எல். ராகுல்

ரோஹித் சர்மா - கே.எல். ராகுல்

வங்கதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ரோஹித்திற்கு பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடைசி ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்து முக்கிய அப்டேட்டை கே.எல். ராகுல் வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் இழந்துள்ளது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் புதன்கிழமை தொடங்குகிறது. இதற்கிடையே காயம் காரணமாக கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்திற்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ரோஹித்திற்கு பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடைசி ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. ரோகித் சர்மா தற்போது மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிறிது நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

‘என்றைக்குமே நீங்கள்தான் சிறந்தவர்’ – மனம் உடைந்துபோன ரொனால்டோவுக்கு விராட் கோலி ஆறுதல்

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் குறித்து தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் கே.எல். ராகுல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா இடம்பெற மாட்டார். ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் இந்திய அணி அவரை இழந்து இருக்கிறது.  எங்களை பொறுத்தவரையில் ரோஹித் மிக முக்கியமான மற்றும் அனுபவம் மிக்க ஆட்டக்காரர்.

இங்கிலாந்து வீரருக்கு ஹேண்ட் ஷேக் செய்ய மறுத்த பாக். பேட்ஸ்மேன் – வைரல் வீடியோ

கேப்டனாக அணியை அவர் சிறப்பாக வழி நடத்தியுள்ளார். உடல் நிலை பூரண குணமடைந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, அவர் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்

First published:

Tags: Kl rahul, Rohit sharma