Indian test team| ரகானே கேப்டன், ரோகித் சர்மாவுக்கு ஒய்வு- டெஸ்ட் அணியில் ஷ்ரேயஸ் அய்யர், கே.எஸ்.பரத் -கோலியின் நிலை என்ன?
Indian test team| ரகானே கேப்டன், ரோகித் சர்மாவுக்கு ஒய்வு- டெஸ்ட் அணியில் ஷ்ரேயஸ் அய்யர், கே.எஸ்.பரத் -கோலியின் நிலை என்ன?
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு, கோலி, ரோகித் சர்மாவுக்கு ஓய்வு
நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியிலிருந்து ரோகித் சர்மா, பும்ரா, ஷமி, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார், விராட் கோலி 2ம் டெஸ்ட் போட்டிக்குத் திரும்புகிறார். டெஸ்ட் அணியில் ஷ்ரேயஸ் அய்யர், கே.எஸ்.பரத் சேர்க்கபப்ட்டுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு 16 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷ்ரேயஸ் அய்யர் முதல் முறையாக டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அஜிங்கிய ரகானே முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன்சி செய்ய விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டிக்கு திரும்புகிறார்.
செடேஸ்வர் புஜாரா வைஸ் கேப்டன் பொறுப்பு வகிப்பார், ஆனால் கோலி திரும்பியவுடன் இவர் இந்தப் பொறுப்பில் நீடிப்பாரா என்பது தெரியாது. இந்திய டெஸ்ட் அணி வருமாறு:
பாவம் இந்த அணியில் ஹனுமா விகாரி இல்லை, அவர் நீக்கப்பட்டுள்ளார், அவருக்குப் பதிலாக ஷ்ரேயஸ் அய்யர் வந்துள்ளார். நவம்பர் 17ம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான தொடர் தொடங்குகிறது. முதலில் 3 டி20 போட்டிகள் நடக்கின்றன, இதில் ரோகித் சர்மா கேப்டனாக இருப்பார். டி20 கேப்டனாக ரோகித் சர்மா அதிகாரபூர்வமாக பொறுப்பேற்று முதல் தொடரில் கேப்டன்சி செய்யவிருக்கிறார், இதற்கு முன் கோலி இல்லாத நிலையில் பதிலி கேப்டனாக இருந்தார். இப்போது முழு நேர டி20 கேப்டன் ரோகித் சர்மா ஆவார்.
விராட் கோலி டி20 கேப்டன்சியிலிருந்து உலகக்கோப்பை டி20யுடன் விலகியுள்ளார், முற்றிலும் புதிய இந்திய கிரிக்கெட் நிர்வாகம், திராவிட் பயிற்சியாளர். ரோகித் கேப்டன், ரகானே டெஸ்ட் கேப்டன். புதிய வீரர்கள் என்று தடபுடலாக இந்திய அணி களமிறங்குகிறது. நியூசிலாந்து அணிக்குப் பெரிய பின்னடைவாக டெவன் கான்வே என்ற அற்புதன் காயம் காரணமாக விலக நேரிட்டு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.