Home /News /sports /

கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி ஆக்ரோஷமாக இல்லை, ரோஹித் கேப்டன்சியில் அது உள்ளது - ஆகாஷ் சோப்ரா

கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி ஆக்ரோஷமாக இல்லை, ரோஹித் கேப்டன்சியில் அது உள்ளது - ஆகாஷ் சோப்ரா

ரோஹித் சர்மா, விராட் கோலி

ரோஹித் சர்மா, விராட் கோலி

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் மாறுபட்ட கேப்டன்சி பாணிகள் குறித்து தனது தீர்ப்பை வழங்கியுள்ளார். ரோஹித்தின் கீழ் இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடுகிறது. கோஹ்லியின் கீழ் ஆக்ரோஷமாக இல்லை என்று புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் மாறுபட்ட கேப்டன்சி பாணிகள் குறித்து தனது தீர்ப்பை வழங்கியுள்ளார். ரோஹித்தின் கீழ் இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடுகிறது. கோஹ்லியின் கீழ் ஆக்ரோஷமாக இல்லை என்று புதிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

    நாம் பொதுவாக கோலியின் பாடி லாங்குவேஜைப் பார்த்து அவர்தான் ஏதோ ஆக்ரோஷமாக இருக்கிறார் என்று தப்புக் கணக்குப்போடுவோம், அது வெறும் பாடி லாங்குவேஜ்தான் உள்ள ஒன்றுமில்லை என்பது தெரிய நீண்ட காலம் பிடித்தது. மாறாக ரஹானே வெளியில் காட்டாத ஒரு ஆக்ரோஷம் படைத்தவர், ரோஹித் சர்மா ஒரு புன்னகையால் எதிரணியை துவம்சம் செய்பவர் என்று இப்போது என்னவோ ரோஹித் சர்மாவுக்கான முட்டுக்கொடுத்தல் கொஞ்சம் அதிகமாகவே நடந்து கொண்டிருக்கின்றன.

    இந்நிலையில் சோப்ரா தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில், விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப் பாணியை ஒப்பிட்டுப் பேசினார், இந்திய அணி விராட் கோலி தலைமையில் ஆக்ரோஷமாக இல்லை என்று வலியுறுத்தினார்.

    “விராட் கோலியின் பெரிய கவனம் - 'நான் இதைச் செய்ய விரும்புகிறேன்.' முன்னுதாரணமாக இருக்க விரும்புவது போன்று நிறைய இருந்தது. விராட் கோலி களத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார், எப்போதும் எதிரணியின் முகத்துக்கு நேராக நிற்பார். ஒருபோதும் பின்தங்கியதில்லை. ஆனால் விராட் கோலியின் கீழ் அணி அவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கவில்லை.

    அவர் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தார், ஆனால் அணி ஆக்ரோஷமாக இல்லை என்பது மிகவும் சுவாரஸ்யமானது. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவர் தீவிரத்தைப் பற்றி பலமுறை பேசினார், ஆனால் [சேதேஷ்வர்] புஜாரா ஒரு போட்டியில் இரண்டு முறை ரன் அவுட் ஆவதை நாங்கள் பார்த்தோம். எனவே 'தீவிரம்' என்ற சொல் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்பது நமக்குப் புரிகிறது.

    ரோஹித் ஷர்மா கேப்டனாக மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதாபாத்திரம். ரோஹித் ஷர்மாவை நீங்கள் சந்திக்கும்போதோ அல்லது மைதானத்தில் அவரைப் பார்க்கும்போதோ, அவர் ஆ... ஊ என்றெல்லாம் பாடி லாங்குவேஜ் காட்டமாட்டார். ஆனால் அவருக்குக் கீழ் விளையாடும் அணி தாக்குகிறது என்பதுதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

    ரோஹித்தின் கீழ் வீரர்கள் சுதந்திரத்துடன் விளையாடுவதை நாங்கள் பார்த்தோம் அல்லது நீங்கள் ஆக்ரோஷம் என்று சொல்லலாம். அதற்கு முக்கிய காரணம், அவர் அணிக்கு நம்பிக்கை தருகிறார், அவர்கள் ஒரு கொள்கையைஉருவாக்கிவிட்டார்கள் அதன்படி அவர்கள் விளையாடுவார்கள், மேலும் அவர் வீரர்களுக்கு ஆதரவு அளித்து அவர்களை நீக்க விட மாட்டார்” என்கிறார் ஆகாஷ் சோப்ரா.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Rohit sharma, Virat Kohli

    அடுத்த செய்தி