• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய அணியில் வலுவான இளம் வீரர்கள் உருவானதற்கு திராவிட்தான் காரணம்- ஆஸ்திரேலிய மூளையைப் பயன்படுத்தினார், என்கிறார் கிரெக் சாப்பல்

இந்திய அணியில் வலுவான இளம் வீரர்கள் உருவானதற்கு திராவிட்தான் காரணம்- ஆஸ்திரேலிய மூளையைப் பயன்படுத்தினார், என்கிறார் கிரெக் சாப்பல்

ராகுல் திராவிட்- சாப்பல் புகழாரம்

ராகுல் திராவிட்- சாப்பல் புகழாரம்

ஆஸ்திரேலியாவின் வலுவான சிந்தனை, கிரிக்கெட் மூளையைப் பயன்படுத்தி, இந்தியாவில் திறமையான, வலுவான இளம் வீரர்களைக் கொண்ட கட்டமைப்பை ராகுல் திராவிட் உருவாக்கிவிட்டார் என்கிறார் கிரெக் சாப்பல்.

  • Share this:
இந்தியாவில் தனது பயிற்சித்திறமையினால் ராகுல் திராவிட் வலுவான இளம் வீரர்கள் உடைய நல்ல கட்டமைப்பை உருவாக்கியுள்ளார் இளம் வீரர்களுக்கான பயிற்சியாளர் ராகுல் திராவிட் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கிரெக் சாப்பல் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் வலுவான சிந்தனை, கிரிக்கெட் மூளையைப் பயன்படுத்தி, இந்தியாவில் திறமையான, வலுவான இளம் வீரர்களைக் கொண்ட கட்டமைப்பை ராகுல் திராவிட் உருவாக்கிவிட்டார் என்கிறார் கிரெக் சாப்பல்.

இந்திய அணிக்கு கிரெக் சாப்பல் கேப்டனாக இருந்த போது கங்குலி முதலிலும் பிற்பாடு ராகுல் திராவிடும் கேப்டனாக கிரெக் சாப்பலுடன் பணியாற்றினர். கிரெக் சாப்பலின் அறிவுரைகளின் படி ராகுல் திராவிட் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார், வாய்ப்பு என்றால் சும்மா அழைப்பது பிறகு விட்டுவிடுவது என்பதல்ல, பேட்டிங்கில் 3ம் நிலையில் சோதனை முயற்சிகளை மேற்கொண்ட கேப்டன் திராவிட் அந்த நிலையில் இளம் வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி சில வீரர்களை உருவாக்கப் பாடுபட்டார்.

கோச் கிரெக் சாப்பல்


அந்தக் காலக்கட்டத்தில்தான் கிரெக் சாப்பல் பயிற்சியில் ராகுல் திராவிட் தலைமையில் இந்திய அணி சேஸிங்கில் 17 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற சாதனையை வைத்துள்ளது, அந்தச் சாதனையை அதன் பிறகு அளவுக்கு மீறி புகழப்படும் தோனியினால் அவர் கேப்டன்சி செய்த விதத்தில் இந்தச் சாதனையெல்லாம் எட்டாக்கனியாகி விட்டது, கோலியும் இந்த சாதனையை செய்ய முடியாது. செப்.2005 முதல் மே 2006 வரை ராகுல் திராவிட் தன் கேப்டன்சியில் 17 முறை சேசிங்கில் தொடர்ச்சியாக வென்று சாதித்தார்.

2007 உலகக்கோப்பையின் போது சச்சின் டெண்டுல்கர் தன் டவுன் ஆர்டரை 4ம் நிலைக்கு மாற்றியதால் சரியாக ஆடாமல் ஒழிக்க ராகுல் திராவிட் கேப்டன்சியில் தீரா களங்கமாக முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது.

கோச் கிரெக் சாப்பல்-கேப்டன் ராகுல் திராவிட், அருகில் சச்சின்.


கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான தோல்வியைச் சந்தித்தது. 2-வது போட்டியிலிருந்து கேப்டன் கோலி, தாயகம் சென்றுவிட்டார். மூத்த வீரர்கள் ஜடேஜா, ஷமி, போன்றோர் காயத்தால் விளையாடவில்லை. ஆனால், அனுபவமில்லா இளம் வீரர்கள் சேர்ந்து ஆஸ்திரேலிய அணியைப் புரட்டி எடுத்து டெஸ்ட் தொடரை வென்றனர்.

ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களான வார்னர், ஸ்மித் லபுஷேன், போன்றவர்கள் கூட சிராஜ், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டவர்கள் பவுலிங்கில் விரைவில் ஆட்டமிழந்தனர். அதோடு இல்லாமல் பேட்டிங்கில் ரிஷப் பந்த் பெரிய எழுச்சி பெற ஷர்துல் தாக்கூர் தான் ஒரு ஆல்ரவுண்டர் என்று நிரூபிக்க வாஷிங்டன் சுந்தர் தன் பேட்டிங் திறனை கூடுதலாக வெளிப்படுத்த இந்தியா தொடரை ரஹானே தலைமையில் 2-1 என்று வென்றது.

இதற்கு முக்கியக் காரணம் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இளம் வீரர்களைப் பட்டை தீட்டி, செதுக்கி இந்திய அணிக்கு வழங்கி வரும் ராகுல் திராவிட்தான் என்று புகழப்பட்டது.

இந்திய அணி வீரர்களுடன் ரகானே


இந்நிலையில் கிரெக் சாப்பல் கூறியதாவது:

இளம் வீரர்களைத் திறமையான அளவில் உருவாக்கி இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன, அவர்களுக்கு நல்ல அடித்தளத்தை உருவாக்கிவிட்டன.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட், ஆஸ்திரேலியர்களின் மூளையைப் பயன்படுத்தி இந்தியாவில் இளம் வீரர்களுக்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கிவிட்டார். ஆஸ்திரேலியாவில் இளம் வீரர்களை எவ்வாறு நாங்கள் உருவாக்கினோமோ அதேபோன்று இந்தியாவில் இளம் வீரர்களை ராகுல் திராவிட் உருவாக்கி வருகிறார்.

வரலாற்று ரீதியாகவே இளம் வீரர்களை அதிகமாக உருவாக்கும் நாடு என்று பெயரெடுத்தோம். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அந்தப் பெயர் மாறிவிட்டது. இளம் வீரர்கள் அதிகமான அளவில் வந்தாலும் அவர்களில் பலர் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக விளையாட முடியவில்லை.

இளம் வீரர்களை வளர்த்தெடுத்து, உருவாக்குவதில் இங்கிலாந்து அணி சிறப்பாகச் செயல்படுகிறது. எங்களைவிட இந்திய அணி இன்னும் சிறப்பாக இளம் வீரர்களை உருவாக்குகிறது. பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடிய இந்திய அணி ஏ அணி என்று பலரும் கூறினாலும், அதில் விளையாடிய இளம் வீரர்கள் செயல்பாடு ஏ அணி வீரர்கள் போல் இல்லாமல் அனுபவ வீரர்கள் போல் செயல்பட்டனர்'' என்றார் கிரெக் சாப்பல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: