• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் -5வது டெஸ்ட் நடக்குமா?

இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் -5வது டெஸ்ட் நடக்குமா?

இந்திய அணி.

இந்திய அணி.

இந்திய அணியின் பயிற்சி உதவிக்குழுவில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன காரணமாக மான்செஸ்டரில் இந்திய அணியின் பயிற்சி ரத்து ஆகியுள்ளது.

  • Share this:
    இதனை பிடிஐ செய்தி ஏஜென்சிக்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். ஆனால் யாருக்குக் கொரோனா தொற்று என்று வெளியிடப்படவில்லை. வீரர்களை அவரவர்கள் அறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி தனிமையில் இருக்கிறார்.

    பீல்டிங் கோச் ஆர்.ஸ்ரீதர், பிசியோ நிதின் படேல், பவுலிங் கோச் பாரத் அருண் ஆகியோரும் லண்டனில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஓவலில் 5ம் நாளில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற போது பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் மட்டும்தான் அணிஉடன் இருந்தார்.

    கொரோனா தொடர்ந்து இந்திய அணியை பாதித்து வருவதால் 5வது டெஸ்ட் நடக்குமா என்பது ஐயத்திற்கிடமாகியுள்ளது. ரவிசாஸ்திரி, விராட் கோலி உள்ளிட்டோர் லண்டனில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றிற்குச் சென்றதையடுத்து ரவிசாஸ்திரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பிசிசிஐ அதிருப்தி அடைந்துள்ளது.

    கேப்டன் விராட் கோலி, சில வீரர்கள், பயிற்சியாளர்கள் லண்டனில் புத்தக அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோவிட் ஆபத்தில் சிக்கியதாக பிசிசிஐ கடும் அதிருப்தி எழுப்பியுள்ளது. அனுமதியும் பெறாமல் பயோபபுளை விட்டு வெளியே வந்து புத்தக அறிமுக விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக ஆங்கில முன்னணி ஊடகம் ஒன்றிற்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறிய போது “இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் பிசிசிஐ-யிடம் பகிரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்த்தினால் கிரிக்கெட் வாரியம் தர்ம சங்கடமடைந்துள்ளது. ஓவல் டெஸ்ட் முடிந்தவுடன் இதற்கான விளக்கத்தை கோலியும் ரவிசாஸ்திரியும் அளிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப் படுவார்கள். அணியின் நிர்வாக மேலாளர் கிரிஷ் டோங்ரேயின் பங்கும் என்னவென்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

    இவர்கள் செய்த காரியத்தினால் அடுத்த டெஸ்ட் போட்டி சிக்கலுக்குள்ளாகமல் நடக்க வேண்டும் என்ற கவலை ஏற்பட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ தொடர்பில் இருந்து வருகிறது. இந்நிலையில்தான் சப்போர்ட் ஸ்டாஃப் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: