முகப்பு /செய்தி /விளையாட்டு / கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல்.. செல்ஃபி எடுப்பதில் தகராறா..? வெளியான அதிர்ச்சி வீடியோ

கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது தாக்குதல்.. செல்ஃபி எடுப்பதில் தகராறா..? வெளியான அதிர்ச்சி வீடியோ

பிரித்வி ஷா மீது தாக்குதல்

பிரித்வி ஷா மீது தாக்குதல்

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது மும்பையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா புதன்கிழமை இரவு நண்பர்களுடன் ஒரு ஹோட்டலில் டின்னர்-க்கு சென்றுள்ளார். அப்போது ரசிகர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு ஆணும் பெண்ணும் பிரித்வி ஷாவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். அவரும் அவர்களுடன் சில போட்டோக்களை எடுத்துக்கொண்டார். ஆனால் அவர்கள் மேலும் புகைப்படம் எடுத்துக்கொள்ள பிரித்வி ஷாவை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தனது நண்பர்கள் மற்றும் ஹோட்டல் மேனேஜரை அழைத்த பிரித்வி அவர்களை கட்டுப்படுத்துமாறு கூறியுள்ளார். ஹோட்டல் நிர்வாகத்தினர் அந்த இருவரையும் ஹோட்டலை விட்டு வெளியேற்றியுள்ளனர். இதையடுத்து ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த ஜோடி, பிரித்வி ஷா அங்கிருந்து புறப்பட்ட பின் அவரது காரை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

மும்பை சாலையில் காரை மறித்துள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரித்வி ஷா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்வி ஷா நண்பர் கொடுத்த புகாரில், ஹோட்டலில் இருவர் பிரித்வியிடம் செல்ஃபி கேட்டு தொல்லை கொடுத்தனர். எங்களை சாப்பிடக்கூட விடவில்லை. ஹோட்டல் நிர்வாகத்திடம் கூறினோம், அவர்கள் இருவரையும் வெளியேற்றினர். ஹோட்டலில் இருந்து நாங்கள் வெளியேறிய போது அந்த இருவருடன் மேலும் சிலர் பேஸ்பால் மட்டையுடன் காத்திருந்தனர். எங்கள் காரை அடித்து சேதப்படுத்தினர். நாங்கள் அங்கிருந்து புறப்பட்டதும் பெட்ரோல் பங்க் அருகே எங்களை மறித்து தகராறில் ஈடுபட்டனர். ரூ. 50,000 கேட்டு மிரட்டினர் இல்லையென்றால் போலீசில் பொய்யாக புகார் கொடுப்போம் என மிரட்டியதாக  அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  சனா (எ) ஸ்வப்ணா கில் என்ற பெண்ணையும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரித்வி ஷாவின் நண்பர்கள் தான் அந்தப்பெண்ணை முதலில் தாக்கியதாக சனாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சனாவை பிரித்வி ஷா அடித்ததாகவும் அவரது கையில் கட்டைகள் இருந்ததாக கூறியுள்ளார். அந்தப்பெண்ணை சிகிச்சைக்கு கூட அனுப்பாமல் போலீஸார் காவல்நிலையத்தில் வைத்திருப்பதாக அவரது வழக்கறிஞர் குற்றச்சாட்டுகிறார்.

First published:

Tags: Attacked, BCCI, Indian cricket team, Mumbai, Prithvi Shaw