ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி...!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி...!

India vs New Zealand |

India vs New Zealand |

India vs New Zealand |

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 348 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தாலும் 183 ரன்கள் முன்னிலை பெற்றது.

பின்னர், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை. மயங்க் அகர்வால் மட்டும் அரை சதம் அடித்து ஆறுதல் அளித்தார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்து 39 ரன்கள் பின்தங்கியிருந்தது.

இன்று 4ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து நியூசிலாந்து வீரர்கள் அசத்தினர். 191 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது.

9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 1.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. இதன் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 எனவும் அந்த அணி முன்னிலை பெற்றுள்ளது.

முதல் இன்னிங்சில் 4 விக்கெட், 2வது இன்னிங்சில் 5 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டிம் சோதீ ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 29ஆம் தேதி ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Also see:

First published:

Tags: Cricket, Cricket live score, First test cricket match, New zealand v india