ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான வீரர்கள் அறிவிப்பு! தோனிக்கு அணியில் இடமில்லை

வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான வீரர்கள் அறிவிப்பு! தோனிக்கு அணியில் இடமில்லை

இந்திய அணி

இந்திய அணி

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி-20 தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் அணிகள் மோதும் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. முதல் டி-20 போட்டி டிசம்பர் 6-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், டி-20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி வீரர்களை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. டி-20 தொடரில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

  ஒருநாள் அணி வீரர்கள்:

  விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணைக் கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது சமி, புவணேஷ்வர் குமார்

  டி-20 அணி வீரர்கள்:

  விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணைக் கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவிந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது சமி, புவணேஷ்வர் குமார்

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: India team