மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் அணி அறிவிப்பு!

cricketnext
Updated: October 11, 2018, 7:18 PM IST
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் அணி அறிவிப்பு!
மாதிரிப் படம்
cricketnext
Updated: October 11, 2018, 7:18 PM IST
மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பைக்கான அணியில் விளையாடிய கலீல் அகமது இம்முறையும் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மேற்கு இந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், நாளை இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான அணியில் எம்.எஸ் தோனி, ரிஷப் பாந்த் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றுள்ளனர். ஷிகர் தவான், ரோகித் சர்மா, அம்பாதி ராயுடு, கே.எல் ராகுல், மணிஷ் பாண்டே ஆகிய பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதப், முகம்மது சமி, கலீல் அகமது, ஷர்குல் தாகூர் ஆகிய வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஆசிய கோப்பை அணியில் விளையாடிய தினேஷ் கார்திக் கழற்றி விடப்பட்டு, ரிஷப் பாந்த் இடம் பெற்றுள்ளார். மேலும், கலீல் அகமதுவுக்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...