மெல்போர்ன் டெஸ்ட்: 4 அதிரடி மாற்றங்கள்- இந்திய அணி அறிவிப்பு

இந்திய அணி அறிவிப்பு.| படம்- பிசிசிஐ ட்விட்டர்.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டித் தோல்விக்குப் பிறகும், விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஷமி ஆகியோர் அணியில் இல்லாத நிலையிலும் 26ம் தேதி நாளை, சனிக்கிழமை மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கவிருக்கும் 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    அடிலெய்ட் டெஸ்ட் போட்டித் தோல்விக்குப் பிறகும், விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஷமி ஆகியோர் அணியில் இல்லாத நிலையிலும் 26ம் தேதி நாளை, சனிக்கிழமை மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கவிருக்கும் 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அணியில் 4 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் எதிர்பார்த்த ஷுப்மன் கில் மற்றும் ஸ்விங் பவுலர் முகமது சிராஜ் தங்கள் முதல் போட்டியில் களம் காண்கின்றனர்.

    ஆனால் கே.எல்.ராகுலைச் சேர்க்க வேண்டும் என்ற பலரது எதிர்பார்ப்புகளும் நிறைவேறவில்லை, ஆம்! கே.எல்.ராகுல் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

    அதே போல் ரவீந்திர ஜடேஜா ஆல்ரவுண்டராகத் தேர்வு செய்யப்பட, மிக முக்கிய மாற்றமாக விக்கெட் கீப்பர் பொறுப்பிற்கு விருத்தி மான் சஹாவுக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவில் கடந்த முறை பிரமாதமாக ஆடிய ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் இல்லை என்று ஏற்கெனவே அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அறிவித்துள்ளார்.

    நாளை காலை இந்திய நேரம் 5 மணிக்கு தொடங்கும் இந்த 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:

    அஜிங்கிய ரஹானே (கேப்டன்)

    செடேஷ்வர் புஜாரா (துணைக் கேப்டன்)

    மயங்க் அகர்வால்

    ஷுப்மன் கில் (அறிமுகம்)

    ஹனுமா விஹாரி

    ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)

    ரவீந்திர ஜடேஜா

    ரவிச்சந்திரன் அஸ்வின்

    உமேஷ் யாதவ்

    ஜஸ்பிரித் பும்ரா

    முகமது சிராஜ் (அறிமுகம்).
    Published by:Muthukumar
    First published: