Home /News /sports /

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தொடர் தோல்வி- காரணம் என்ன?

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி தொடர் தோல்வி- காரணம் என்ன?

இந்திய அணி

இந்திய அணி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் தொடர் தோல்வி ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

    தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் மற்றுமொரு சங்கடத்தை சந்தித்துள்ளது இந்தியா. ஒரு நாள் தொடரிலும் 3 க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்யப்பட்டுள்ளது.

    தென் ஆப்ரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2க்கு ஒன்று என பறிகொடுத்தது.

    ஒரு நாள் தொடரில் மீண்டு எழுந்து வெற்றி வாகை சூடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் 3 க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்யப்பட்டது. முதல் போட்டியில் 31 ரன்களிலும் இரண்டாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் மூன்றாவது போட்டியில் 4 ரன்களிலும் தோல்வியை தழுவியது. மேலும் டெஸ்ட் தொடருக்கான ஐசிசியின் தரவரிசையில் முதல் இடத்திலிருந்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

    பிசிசிஐக்கும் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே நடைபெற்று வரும் பனிப்போரினால், கோலி டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. டி-20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகியதை தொடர்ந்து, அவர் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். ரோஹித் சர்மா காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காத நிலையில் தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார் கே.எல்.ராகுல்.

    ஒரு நாள் தொடர், முழுவதும் கே.எல்.ராகுலின் கேப்டன்சி மிகவும் சாதாரணமானதாகவே இருந்தது. மைதானத்தில் வீரர்களை களமிறக்குவது முதல், பந்துவீச்சு மாற்றங்கள் வரை, அவர் எடுத்த முடிவுகள் எதும் பெரிதாக பலனளிக்கவில்லை. அவர் சுய பாதுகாப்பிலேயே கவனம் செலுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    உதாரணமாக, இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, 79 பந்துகளில் 55 ரன்களை மட்டுமே ராகுல் எடுத்திருந்தார். பந்துகளை வீணடித்ததும், உடன் ஆடிய வீரருக்கு அடிக்க வாய்ப்பு அளிக்காததும் கடும் விமர்சனங்களை பெற்றுள்ளன.

    தென் ஆப்ரிக்காவின் போலண்ட் பார்க் மைதானம், சூழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த போதும், சஹல் மற்றும் அஸ்வின் இருவரும் தலா ஒரு விக்கெட்டையே வீழ்த்தினர்.

    மேலும் உறுதியாக நிலைத்து நின்று விளையாடும் வகையில் பார்ட்னர் ஷிப்பை கட்டமைக்காததும் இந்திய அணியின் பெரும் குறையாக கருதப்படுகிறது,

    தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசிய பும்ராவுக்கு வேறு எந்த பவுலரும் பக்கபலமாக இருக்கவில்லை. அவர் எதிர் அணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பந்து வீசியபோதும் மற்றவர்கள் ரன்களை வாரி வழங்கினர்.

    இதேப்போல் ஆல்ரவுண்டர்களின் சொதப்பலும் அணிக்கு பெரும் சரிவை அளித்தது. பவுலிங்கில் ஷர்துல் தாகூர் சொதப்பியதை போலவே பேட்டிங்கில் வெங்கடேஷ் ஐயர் சோபிக்கவில்லை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Team India

    அடுத்த செய்தி