கங்குலி மற்றும் விராட் கோலி இடையே நடந்த மோதல் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா விவரித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மேற்கொண்ட ரகசிய ஆபரேஷனில் அடுக்கடுக்கான தகவல்களை வெளியிட்டுள்ளார் சேத்தன் சர்மா. ரகசிய (ஸ்டிங்) ஆபரேஷனின்போது அவர் கூறியதாவது- விராட் கோலி – கங்குலி இடையே ஈகோ பிரச்னைகள் இருந்தன. கிரிக்கெட் வாரியத்தை விடவும் தன்னை மிகப்பெரிய ஆளாக கோலி நினைத்துக் கொண்டார். அதனை வெளிப்படுத்தவும் விரும்பினார். விராட் கோலி பிரபலமாகி விட்டால் அவர் தன்னை கிரிக்கெட் வாரியத்தை விடவும் மேலானவர் என்று நினைத்துக் கொண்டார். யாரும் அவரைத் தொட முடியாது எனற எண்ணமும் அவருக்கு இருந்தது. தான் இல்லாவிட்டால் இந்தியாவில் கிரிக்கெட்டே இருக்காது என்றும் அவர் நினைத்தார்.
ஆனால் அடுத்து என்ன நடந்தது? கிரிக்கெட் விளையாட்டில் நட்சத்திர வீரர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால் கிரிக்கெட் என்றைக்குமே ஒரே மாதிரியாக அதே இடத்தில் இருக்கும். அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு எதிராக கோலி செயல்பட்டார். இது ஒரு கிளாசிக்கான விவகாரம். ஒரு வீரர், பிசிசிஐக்கு எதிராக செயல்படுவது அரிதான ஒன்று. 2022 ஜனவரி மாதம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு விளையாட சென்றபோது, ஒருநாள் அணிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தை மீடியா முன்பு வேண்டுமென்றே கோலி பேசினார். ஏனென்றால், தன்னை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு கங்குலியே காரணம் என்று அவர் நினைத்திருந்தார். கங்குலிக்கு அவப் பெயரை ஏற்படுத்த, தன்னை கேட்காமலேயே கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டார்கள் என்று கோலி கூறினார்.
தென்னாப்பிரிக்க தொடருக்கான டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். அவர், டெஸ்ட்டை பற்றி பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஒருநாள் அணிக்கான கேப்டன் நீக்கம், அணியின் தேர்வு குறித்து தேவையில்லாதவற்றை ஊடகங்களில் கொண்டுவந்தார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலக வேண்டாம் என்று விராட் கோலியிடம் கூறியதாக கங்குலி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். ஆனால், தன்னிடம் கங்குலி எதுவுமே கூறவில்லை என்று விராட் கோலி மீடியாக்களிடம் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒருமுறை வீடியோ கான்ஃபரன்சில் பேசிக் கொண்டிருந்தபோது, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதை பரிசீலிக்கும்படி கங்குலி கோலியிடம் கூறினார். அதனை கோலி கவனத்தில் கொள்ளவில்லை. இந்த மீட்டிங்கின்போது 9 பேர் இருந்தோம். கங்குலி சொன்னதை கோலி சரியாக கவனித்தாரா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது. ப்ரஸ் மீட்டில் ஏன் விராட் கோலி அப்படி பேசினார் என்பதும் எங்களுக்கு தெரியாது. அவை தனிப்பட்ட விஷயங்கள். ஆனால் கோலி சொன்னதுதான் தனிப்பட்ட பிரச்னை அவருக்கும் வாரியத்திற்கும் இடையிலான பிரச்னையாக மாறியது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket