முகப்பு /செய்தி /விளையாட்டு / பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரவிந்திர ஜடேஜா…

பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரவிந்திர ஜடேஜா…

ரவிந்திரா ஜடேஜா

ரவிந்திரா ஜடேஜா

இந்தூர் டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி விருதுக்கு இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்திய நிலையில், அவர் ஐசிசி விருதை பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாதந்தோறும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டங்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் 3 போட்டிகள் முடிவுற்ற நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், 2 ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் 70 ரன்கள் எடுத்தார். 2 ஆவது டெஸ்டில் 10 விக்கெட்டுகளுடன் 24 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். 3 ஆவது டெஸ்டில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 4 ஆவது டெஸ்டிலும் ஜடேஜாவின் ஆதிக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவர் பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி விருதை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கடைசி மற்றும் 4 ஆவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை மறுதினம் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி விடும். இந்தூர் டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Cricket