Home /News /sports /

இந்திய டாக்ஸி டிரைவருக்கு விருந்தளித்த பாக். வீரர்கள்! சுவாரஸ்ய நிகழ்வின் பின்னணி

இந்திய டாக்ஸி டிரைவருக்கு விருந்தளித்த பாக். வீரர்கள்! சுவாரஸ்ய நிகழ்வின் பின்னணி

இந்திய டாக்ஸி டிரைவருக்கு விருந்து வைத்து உபசரித்த பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்த பாகிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உணவகத்தில் இருந்த புகைப்படம் வைராகி உள்ளது. அதற்கு காரணம் அவர்களுடன் இந்திய டாக்ஸி டிரைவர் இருந்தது தான். டெஸ்ட் போட்டிக்கு முன் பாகிஸ்தான் வீரர்கள் யாஷிர் ஷா, நாசிம் கான் உள்ளிட்ட வீரர்கள் டாக்ஸி மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளனர்.

தனது டாக்ஸியில் இருப்பது பாகிஸ்தான் வீரர்கள் என்பது தெரிந்த டிரைவர் அவர்களிடம் பணம் வாங்க மறுத்துள்ளார். இதற்கு பதிலாக அவரையும் தங்களுடன் விருந்துக்கு அழைத்து சென்றுள்ளனர் பாகிஸ்தான் வீரர்கள்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் தொடர்பான புகைப்படங்களுக்கு சமூக வலைதளத்தில் ஏராளமான பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Published by:Vijay R
First published:

அடுத்த செய்தி