ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

கேட்ச்ச விடுவியா? ராகுல், வாஷிங்டன் சுந்தரை கடுப்பாகி திட்டிய ரோஹித் சர்மா.. வைரலாகும் வீடியோ!

கேட்ச்ச விடுவியா? ராகுல், வாஷிங்டன் சுந்தரை கடுப்பாகி திட்டிய ரோஹித் சர்மா.. வைரலாகும் வீடியோ!

கோபத்தில் ரோஹித் சர்மா

கோபத்தில் ரோஹித் சர்மா

வங்கதேசத்துடனான போட்டியின் போது ரோஹித் சர்மா சகவீரர்களை கோபத்துடன் திட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaDhakaDhaka

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் சென்று 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மிர்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 186 ரன்களை எடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் பின்வரிசையில் இறங்கிய கே.எல்.ராகுல் நிலைத்து நின்று விளையாடி 73 ரன்களை சேர்த்தார்.

இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி முதலில் இந்திய அணியின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. 136 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து இருந்த வங்கதேச அணி தோல்வியின் விளம்பில் விளையாடிய நிலையில், இறுதி விக்கெட்டில் 50 ரன்களுக்கு மேல் அபார பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை திரில் வெற்றிக்கு கொண்டு சென்றது.

இந்த விக்கெட்டுக்கு இந்திய அணியின் மோசமான பீல்டிங்கும் முக்கிய காரணமாக அமைந்தது. 43ஆவது ஓவரில் இந்திய அணியின் கீப்பர் கேஎல் ராகுல் மெஹிதி ஹசன் மிராஸ் கொடுத்த ஈசியான கேட்சை பிடிக்காமல் கோட்டை விட்டார். அதேபோல், வாஷிங்டன் சுந்தரும் தனக்கு கிடைத்த எளிமையான கேட்சை பிடிக்க முயற்சி கூட செய்யாமல் கோட்டை விட்டார்.

இது அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை கடுமையாக ஆத்திரமூட்டியது. களத்திலேயே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ரோஹித் சர்மா சகவீரர்களை கோபத்துடன் திட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வரும் புதன்கிழமை அன்று இந்திய அணி வங்கதேச அணியை இரண்டாது ஒருநாள் போட்டியில் எதிர்கொள்கிறது.

First published:

Tags: India captain Rohit Sharma, Indian cricket team, Kl rahul, Rohit sharma, Viral Video