Home /News /sports /

சஞ்சு சாம்சனுக்கு கொடுத்த வாக்குறுதியிலிருந்து தவறிய ரோஹித் சர்மா

சஞ்சு சாம்சனுக்கு கொடுத்த வாக்குறுதியிலிருந்து தவறிய ரோஹித் சர்மா

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

சஞ்சு சாம்சன் பற்றிய சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சாம்சனைப் போன்ற திறமையுடைய ஒரு பேட்டர் ஆஸ்திரேலிய பிட்ச்களுக்கு தேவை என்று கூறி சஞ்சு சாம்சனுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்து விட்டு இப்போது அணித்தேர்வில் எந்த ஒரு அணியிலும?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சஞ்சு சாம்சன் பற்றிய சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சாம்சனைப் போன்ற திறமையுடைய ஒரு பேட்டர் ஆஸ்திரேலிய பிட்ச்களுக்கு  தேவை என்று கூறி சஞ்சு சாம்சனுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்து விட்டு இப்போது அணித்தேர்வில் எந்த ஒரு அணியிலும் தேர்வு செய்யாமல் கொடுத்த வாக்குறுதியிலிருந்து தவறியுள்ளார்.

இந்திய உலகக்கோப்பை டி20 அணியும் அதற்கு முந்தைய ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணிகளிலும் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை, இதனையடுத்து ட்விட்டரில் மீண்டும் ஒருமுறை அவர் ட்ரெண்டிங் ஆகி வருகிறார். தென்னிந்தியாவுக்கு எதிராக பாரபட்சம் என்ற ரேஞ்சில் அவரது ரசிகர்கள் பலர் ட்விட்டரில் ஆதங்கங்களைக் கொட்டி வருகின்றனர்.

ரசிகர்களின் ஆதங்கம் மட்டுமல்ல முன்னாள் வீரர்களும் இந்த சஞ்சு ஒழிப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பலரும் டி20-யில் திணறி வரும் ரிஷப் பண்ட்டுக்குப் பதில் சஞ்சு சாம்சன் தான் இடம்பெற வேண்டும் என்று கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் டி20 உலகக்கோப்பை அணி மற்றும் அணி சேர்க்கை குறித்து தனது யூடியூப் வீடியோவில் பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார். அதில், சஞ்சு சாம்சனுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. டி20 உலகக்கோப்பைக் குழுவில் அவர் இடம்பெற்றிருக்க வேண்டும்.

அவர் அணியில் இடம்பெற முடியாத அளவுக்கு என்ன தவறு செய்தார்? ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்நாட்டு தொடர்களுக்கும் அவர் இல்லை. நானாக இருந்தால் ரிஷப் பண்ட்டிற்கு பதில் சஞ்சு சாம்சனைத்தான் சேர்ப்பேன்’ என்றார் டேனிஷ் கனேரியா.

இதையும் படிங்க: பரிதாப சஞ்சு சாம்சன்! எந்த அணியிலும் இடமில்லை: ஆஸ்திரேலியா, தெ.ஆ. தொடருக்கான டி20 அணி அறிவிப்பு

ஏன் , ரோஹித் சர்மா கூட  சஞ்சு சாம்சன் பற்றி, “அணி நிர்வாகமாக சஞ்சுவிடம் நிறைய திறமைகளைப் பார்க்கிறோம். மேட்ச் வின்னிங் திறமைகள் அவரிடம் உள்ளது. அவரது பேக்ஃபுட் ஆட்டம் அருமை. புல் ஷாட், கட் ஷாட், பவுலர் தலைக்கு மேல் அடிக்கும் சிக்சர்கள், இந்த ஷாட்களெல்லாம் ஆடுவது கடினம். ஆஸ்திரேலியா (டி20 உ.கோப்பை) செல்லும் போது இத்தகைய ஷாட் ஆடும் ஒரு வீரர் அவசியம் தேவை. சாம்சனிடம் அது இருக்கிறது” என்று முன்பொரு முறை  கூறியிருந்தார்.

திடீரென ஆஸ்திரேலியா போன்ற பிட்ச்களில் சஞ்சுவினால் ஆட முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாரோ ரோஹித். இதன் மூலம் சஞ்சுவுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை மீறியுள்ளார் ரோஹித் சர்மா.
Published by:Murugesh M
First published:

Tags: India captain Rohit Sharma, Sanju Samson, Team India

அடுத்த செய்தி