இந்திய வீரர்கள் விராட் கோலியின் கீழ் பயத்துடனும், ரகானேவின் கீழ் கூலாகவும் செயல்படுகின்றனர் - ஆஸி முன்னாள் வீரர் ஷேன் லீ

இந்திய வீரர்கள் விராட் கோலியின் கீழ் பயத்துடனும், ரகானேவின் கீழ் கூலாகவும் செயல்படுகின்றனர் - ஆஸி முன்னாள் வீரர் ஷேன் லீ

விராட் கோலி

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீயின் சகோதரரும், முன்னாள் ஆல் ரவுண்டருமான ஷேன் லீ, கோலியின் கேப்டன்ஷிப் குறித்து பரபரப்பான கருத்தை முன்வைத்துள்ளார்.

  • Share this:
இந்திய கிரிக்கெட் வீரர்கள், விராட் கோலியின் தலைமையின் கீழ் பதற்றமாக காணப்படுகின்றனர், அதே நேரத்தில் ரகானேவின் தலைமையின் கீழ் கூலாக இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் லீ கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடருக்கு பின் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. பொதுவாகவே முன்னணி வீரர்களை அதிகம் சார்ந்ததாக கருதப்படும் இந்திய அணி ஆஸி தொடரில் முன்னணி வீரர்கள் 8 பேர் இல்லாத நிலையிலும் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பெற்று நாடு திரும்பியுள்ளது.

அதே போல தோனிக்கு மாற்றாக ரிஷப் பந்த் இத்தொடரில் முக்கியமான பலம் வாய்ந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக விமர்சனங்க எழுந்துள்ளன.

இதே போன்று மற்றொரு விமர்சனம் தான் கேப்டன் பதவி குறித்ததாக உள்ளது. தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின்னர் அனைத்து வடிவ கிரிக்கெட்டும் கேப்டனாக இருந்து வருபவர் விராட் கோலி தான். கேப்டன் பொறுப்பை ஏற்ற கோலி தனது பணியை சிறப்பாகவே செய்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு குழந்தை பிறக்க இருந்ததால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இருந்து பாதியில் வெளியேறி நாடு திரும்பினார் கோலி.

விராட் கோலி


அதனையடுத்து துணை கேப்டன் ரகானே கேப்டன் பதவியை ஏற்றார். முக்கிய வீரர்கள் இல்லாத சூழலிலும், முதல் டெஸ்டில் 36 ரன்களுக்கு சுருண்டு மாபெரும் தோல்வியை இந்திய அணி சந்தித்த இக்கட்டாண தருணத்தில், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கேப்டன் பொறுப்பை ஏற்ற ரகானே, புதுமுக வீரர்களுடன் களமிறங்கி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதற்காக அவர் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். இவரை கேப்டனாக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் குரல்கள் எழுந்துள்ளன.

பிஷன் சிங் பேடி:

ரகானேவின் கேப்டன்ஸியை டைகர் பட்டோடியுடன் ஒப்பிட்டு புகழ்ந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி, கோலி பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவிருக்கும் தொடரில் கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்க கோலி முன்வர வேண்டும் என்று சிறிது நாட்களுக்கு முன்னர் கோரிக்கை வைத்தார்.

ஷேன் லீ:

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீயின் சகோதரரும், முன்னாள் ஆல் ரவுண்டருமான ஷேன் லீ, கோலியின் கேப்டன்ஷிப் குறித்து பரபரப்பான கருத்தை முன்வைத்துள்ளார்.

ஆஸி கிரிக்கெட் வீரர் ஷேன் லீ


“கோலி எப்போதுமே சிறந்த பேட்ஸ்மேன் தான் அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அவரின் கேப்டன்ஷிப்பின் கீழ் இந்திய வீரர்கள் பயத்துடனும், பதற்றத்துடனும் இருப்பதாக உணர முடிகிறது. அதே நேரத்தில் ரகானேவின் கீழ் இந்திய வீரர்கள் கூலாகவும், ரிலாக்ஸாகவும் இருப்பதை பார்க்க முடிகிறது.

கோலி கேப்டன் பதவியை விட்டுக்கொடுப்பாரா என தெரியாது. ஒரு வேளை இந்திய அணியின் தேர்வுக்குழுவில் நான் இருந்திருந்தால் ரகானேவை கேப்டனாக்கியிருப்பேன், கோலியை பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த கூறுவேன், ரகானேவின் கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என நான் நினைக்கிறேன். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்” என ஷேன் லீ கூறியிருக்கிறார்.

ஷேன் லீ, பிரெட் லீ, ஆஸ்திரேலிய அணி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர், அஜிங்கியா ரகானே, விராட் கோலி, கேப்டன், இந்திய கிரிக்கெட் கேப்டன்,
Published by:Arun
First published: