ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரிஷப் பந்த் குணமடைய வேண்டி இந்திய அணி வீரர்கள் கோயிலில் பிரார்த்தனை… சூர்யகுமார், குல்தீப், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்பு

ரிஷப் பந்த் குணமடைய வேண்டி இந்திய அணி வீரர்கள் கோயிலில் பிரார்த்தனை… சூர்யகுமார், குல்தீப், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்பு

கோயிலில் பிரார்த்தனை செய்யும் இந்திய அணி வீரர்கள்.

கோயிலில் பிரார்த்தனை செய்யும் இந்திய அணி வீரர்கள்.

இந்திய அணியில் ரிஷப் பந்த் மிக முக்கியமான வீரர். அவர் விரைவில் குணம் அடைந்து அணிக்கு திரும்ப வேண்டும் – சூர்ய குமார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் விரைவில் குணம் அடைய வேண்டி இந்திய அணியின் வீரர்கள் சூர்யகுமார், குல்தீப், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் உஜ்ஜெய்ன் மஹா காலேஸ்வர் கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் கவனம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அதிகாலை டெல்லியில் இருந்து உத்தராகண்ட்டிற்கு காரில் வந்த ரிஷப் பந்த் விபத்துக்குள்ளானார். இதையடுத்து அவருக்கு டேராடூனில் முதல்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டனர். இதன்பின்னர் அவர் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மும்பையில் தற்போது ரிஷப் பந்த்திற்கு அறுவை சிகிச்சைகள் ஒவ்வொன்றாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் அறுவை சிகிச்சை 2 வாரங்களுக்கு முன்பாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அடுத்ததாக இன்னும் 4 வாரங்களில் மற்றொரு ஆபரேஷன் நடைபெறவுள்ளது. விபத்து ஏற்பட்டபின்னர் முதன் முறையாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ரிஷப் பந்த் தான் விரைந்து குணம் அடைந்து வருவதாக கூறியிருந்தார். அணியில் ரிஷப் பந்த் இல்லாத சூழலில் அவரது இடத்தை இளம் வீரர் இஷான் கிஷன் நிரப்பி வருகிறார். இந்நிலையில் ரிஷப் பந்த் விரைந்து குணம் அடைய வேண்டிய இந்திய அணி வீரர்கள் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெய்னில் உள்ள மகா காலேஸ்வர் கோயிலில் பிரார்த்தனை மேற்கொண்டனர்.

இதில் இந்திய அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோருடன் பணியாளர்களும் இன்று காலையில் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சூர்ய குமார், ‘இந்திய அணியில் ரிஷப் பந்த் மிக முக்கியமான வீரர். அவர் விரைவில் குணம் அடைந்து அணிக்கு திரும்ப வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்தோம். அவரது கம்பேக் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளோம். கடைசிப் போட்டியிலும் வெற்றிபெற போராடுவோம்’ என்று கூறினார்.

First published:

Tags: Cricket, Rishabh pant