மற்ற பேட்ஸ்மேன்களை போல் நடித்துக் காட்டிய இந்திய வீரர்கள்.. ஹைலைட் இவர் தான்..! - வீடியோ

மற்ற பேட்ஸ்மேன்களை போல் நடித்துக் காட்டிய  இந்திய வீரர்கள்.. ஹைலைட் இவர் தான்..! - வீடியோ
INDvsNZ
  • Share this:
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியின் போது பீல்டிங் செய்ய வந்த இந்திய வீரர்கள் பேட்ஸ்மேன்களைப் போல் நடித்துக்காட்டி விளையாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரை இந்தியா 5-0 என்று வென்றிருந்த நிலையில், சமீபத்தில் ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹாமில்டன் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. பின்னர் இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 48.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அனியின் மூத்த வீரரான ராஸ் டெய்லர் 84 பந்துகளில் 109 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.


Also Read : விக்கெட் கீப்பராக தோனி சாதனையை முறியடித்த கே.எல்.ராகுல்!

முன்னதாக நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கும் முன் களத்திற்கு வந்த இந்திய வீரர்கள், நியூசி வீரர்களின் வருகைக்காக காத்திருந்தவேளையில், மற்ற பேட்ஸ்மேன்களின் போஸை நடித்துக்கட்டி விளையாடிக்கொண்டிருந்தனர்.

முதலில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி இந்த சில்மிஷத்தை தொடங்கிவைக்க அதை சாஹல், குல்தீப் போன்ற வீரர்கள் தங்கள் பாணியில் பின்தொடர்ந்தனர். இருப்பினும், ஷமியின் நடிப்பே உட்சபட்சமாக இருந்தது.
First published: February 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்