கிரிக்கெட் வீரர்களுக்கு குறி... ஐசிசியின் எச்சரிக்கையும்... பிசிசிஐ பதிலும்...!

” சூதாட்ட தரகர்கள் முதலில் உங்கள் ரசிகர்கள் போல் உங்களை அணுகுவார்கள்”

கிரிக்கெட் வீரர்களுக்கு குறி... ஐசிசியின் எச்சரிக்கையும்... பிசிசிஐ பதிலும்...!
பி.சி.சி.ஐ
  • Share this:
கிரிக்கெட் வீரர்களை சூதாட்டக்கார்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கலாம் என்ற ஐசிசி-யின் ஊழல் தடுப்பினர் தகவலுக்கு பிசிசிஐ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பது, பழைய நினைவுகளை நினைவு கூர்வது என பொழுதைக் கழித்து வருகின்றனர்.


இதுப்போன்ற தருணங்களை பயன்படுத்தி சூதாட்ட தரகர்கள் கிரிக்கெட் வீரர்களை சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளன. குறைவான ஊதியத்தில் விளையாடும் வீரர்கள், வருமானம் அதிகம் தேவைப்படும் வீரர்களை சூதராட்ட தரகர்கள் குறிவைத்து அணுக முயற்சிப்தால் வீரர்கள் கவனத்துடன் இருக்குமாறு ஐசிசி ஊழல் தடுப்பு சார்பில் அறுவுறுத்தப்பட்டிருந்தது.

ஐசிசி-யின் அறுவுறுத்தலை அடுத்து பிசிசிஐ ஊழல் தடுப்பு தலைவர் அஜித் சிங் கூறுகையில், “இந்திய வீரர்கள் அனைவரும் விழப்புணர்வுடன் உள்ளார்கள். இந்திய வீரர்களின் செயல்பாட்டை நன்கு அறிந்துள்ளோம். சந்தேகத்திற்குரிய எதையும் விரைவில் புகார் அளிப்பார்கள். அதனால் எந்த கவலையும் வேண்டாம்“ என்று தெரிவித்துள்ளார்.

சூதாட்ட தரகர்கள் அணுகுமுறையிலிருந்து இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சூதாட்ட தரகர்கள் முதலில் உங்கள் ரசிகர்கள் போல் உங்களை அணுகுவார்கள். பின் உங்களை சந்திக்க முயற்சிப்பார்கள். அதனால் அதிக கவனத்துடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
First published: April 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading