• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஐபிஎல்-க்கு அளிக்கும் முக்கியத்துவம்தான் தோல்விகளுக்குக் காரணம்: கபில் தேவ் வேதனை

ஐபிஎல்-க்கு அளிக்கும் முக்கியத்துவம்தான் தோல்விகளுக்குக் காரணம்: கபில் தேவ் வேதனை

விரக்தியில் விராட்.

விரக்தியில் விராட்.

  • Share this:
    இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் கடைசியில் கத்துக் குட்டி அணிகளிடம் வீரதீரத்தைக் காட்டி வெற்றி பெற்று வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது. சர்வதேச கிரிகெட்டுக்கு முக்கியத்துவம் தராமல் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் இத்தகைய நிலைமைகளுக்குக் காரணம் என்று 1983 உலகக்கோப்பை வெற்றி நாயகன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

    கோப்பையை வெல்லும் அணி இந்தியாதான் மற்ற அணிகள் விலகி விடலாம் கோப்பையை நேராக விராட் கோலி கையில் கொடுத்து விடலாம் என்று 2019 உலகக்கோப்பை போலவே இப்போதும் பில்ட் அப் கொடுக்கப்பட்டு கடைசியில் புஸ்வாணம் ஆகிவிட்டது. அடுத்த வெற்றியைப் பெறும் வரை இந்திய ரசிகர்கள் இதை மறக்க மாட்டார்கள். கோலி கேப்டனாக இருக்க மாட்டார், ஆனால் வரும் கேப்டனுக்கு அவர் ஏற்படுத்தி விட்டுச்சென்ற சேதங்கள் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கூறுவது என்னவெனில், “நம் வீரர்கள் நாட்டுக்காக ஆடுவதற்கு அளிக்கும் முன்னுரிமையை விட ஐபிஎல் தொடருக்குத்தான் அதிக முன்னுரிமை அளிக்கின்றனர். இதற்கு நாம் என்ன சொல்ல முடியும்? தேசத்துக்காக ஆடி வெற்றி தேடித் தருவதில்தான் பெருமை உள்ளது. ஆனால் அவர்கள் நிதி நிலைமையில் எப்படி இருக்கின்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை. இது குறித்து அதிகம் பேச விரும்பவில்லை.

    தேசத்துக்காக ஆடுவதற்குத்தான் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். பிறகுதான் பிரான்சைஸ் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், ஐபிஎல் தொடரில் ஆடக்கூடாது என்று நான்கூறவில்லை. கிரிக்கெட் அட்டவணைகள் நெருக்கமாக உள்ளன, இதைத் தவிர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக அட்டவணையை தயாரிக்க வேண்டும். இதற்கான பொறுப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு உள்ளது.

    உலகக்கோப்பையுடன் கேப்டன் கபில், ஆட்ட நாயகன் அமர்நாத்.


    Also Read: ரோஹித், ராகுல் அரைசதம்- ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது இந்தியா

    யுஏஇ டி20 உலகக்கோப்பை நமக்கு பெரிய பாடமாக அமைந்துள்ளது. இன்னொரு முறை இப்படிப்பட்ட தவறுகள் நிகழாமல் தவிர்க்கப்பட வேண்டும். ஐபிஎல் போட்டிகளுக்கும் சர்வதேச போட்டிகள் அல்லது உலகக்கோப்பை போட்டிகளுக்கும் போதிய இடைவெளி இருக்க வேண்டும்” என்கிறார் கபில்தேவ்.

    Also Read: இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற முடியும்: கொட்டும் மீம் மழை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: