தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கும்.. வைரஸ் எதிர்ப்பாற்றலை முழுமையாக அளிக்காது: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஜெய் ஷா எச்சரிக்கை

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் 23 வீரர்களில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதையடுத்து ஜெய் ஷா இந்திய வீரர்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் 23 வீரர்களில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதையடுத்து ஜெய் ஷா இந்திய வீரர்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.

  • Share this:
    இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் 23 வீரர்களில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதையடுத்து ஜெய் ஷா இந்திய வீரர்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.

    இந்திய வீரர்கள் கூட்ட நெரிசல் உடைய பகுதிகளில் சுற்ற வேண்டாம் என்றும் யூரோ கோப்பைக் கால்பந்து, விம்பிள்டன் டென்னிஸ் தொடர்களை தவிர்க்குமாறும் ஜெய் ஷா ஏற்கெனவே கடிதம் ஒன்றில் எச்சரித்திருந்தார்.

    டெல்டா வகை வைரஸ் பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, பிரேசிலில் அதிகம் காணப்படுகிறது, சமீபத்தில் இங்கிலாந்து வீரர்கள் 3 பேருக்குக் கொரோனா உறுதியானது. இங்கிலாந்து சென்ற இலங்கை அணி பேட்டிங் கோச் கிராண்ட் பிளவர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கும் கொரோனா உறுதியானதால் இந்திய தொடர் 18ம் தேதிக்கு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரருக்கு கொரோனா பாசிட்டிவ்- தனிமைப்படுத்தப் பட்டார்

    இந்நிலையில் இந்திய வீரர் இருவருக்கு கொரோனா என்று சில செய்திகள் தெரிவிக்கின்றன, ஒருவருக்கு என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீரருடன் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் ஜெய் ஷா தன் கடிதத்தில் கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளை தவிர்க்குமாறும், கோவிஷீல்ட் தடுப்பூசி ஓரளவுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஆனால் கொரோனா வைரசிற்கு முழு எதிர்ப்பாற்றலை அளிக்காது, எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியிருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

    மேலும் விம்பிள்டன், யூரோ கால்பந்தையும் தவிர்க்குமாறும் அவர் முன்னதாக தன் கடிதத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: