முகப்பு /செய்தி /விளையாட்டு / செல்பிக்கள், குரூப் போட்டோ.. அன்புடன் மகிழ்ச்சியை பறிமாறிக்கொண்ட இந்திய-பாகிஸ்தான் வீராங்கனைகள்

செல்பிக்கள், குரூப் போட்டோ.. அன்புடன் மகிழ்ச்சியை பறிமாறிக்கொண்ட இந்திய-பாகிஸ்தான் வீராங்கனைகள்

இந்திய பாகிஸ்தான் வீராங்கனைகள் குழு புகைப்படம்

இந்திய பாகிஸ்தான் வீராங்கனைகள் குழு புகைப்படம்

இந்திய பாகிஸ்தான் அணி வீரங்கனைகள் போட்டிக்குப் பின்னர் டிரெஸ்சிங் ரூம்மில் நேரில் சந்தித்து மகிழ்ந்து பேசி அன்பை பறிமாறிக்கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

2023 டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி இந்திய மகளிர் அணி மகத்தான சாதனையை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நேற்று கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியதால் போட்டியில் அனல் பறந்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களத்தில் இறங்கியது.ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 19 ஓவரின் முடிவில் இந்திய அணி 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இந்த சாதனை வெற்றியை வீராங்கனைகள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய பாகிஸ்தான் அணி வீரங்கனைகள் போட்டிக்குப் பின்னர் டிரெஸ்சிங் ரூம்மில் நேரில் சந்தித்து மகிழ்ந்து பேசி அன்பை பறிமாறிக்கொண்டனர். களத்தில் தீவிரமாக மோதிக்கொண்டாலும், இரு அணி வீராங்கனைகளும் போட்டிக்குப் பின்னர் சகஜமாக பேசிப் பழகி குழுப் புகைப்படங்கள் செல்பிக்களை எடுத்துக்கொண்டனர். இரு தரப்பும் பரஸ்பரமாக பாராட்டுக்களை வாழ்த்துகளையும் பறிமாறிக்கொண்டனர்.

இரு நாட்டு அணி வீரங்கனைகளும் நட்புடன் அன்பை பறிமாறிக்கொண்ட தருணங்கள் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஐசிசியும் தனது இணையப் பக்கங்களில் இந்த பதிவுகளை பகிர்ந்து வருகிறது. விளையாட்டை ஆரோக்கியமான போட்டிகளாக மட்டுமே பார்த்து அதன் பின்னர், இரு அணிகளும் சகஜமான பேசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட வீராங்கனைகளுக்கு இணையவாசிகளும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: India and Pakistan, India vs Pakistan, Indian women cricket, T20 World Cup