முகமது ஷமி திங்களன்று அர்ஷ்தீப்புக்கு ஆதரவாக ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை வெளியிட்டார். "கவலைப்படாதே அர்ஷ்தீப். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். வரவிருக்கும் போட்டியில் கவனம் செலுத்துங்கள், அவர்களைப் பார்க்காதீர்கள், அவர்கள் பேசுவதைக் கேட்காதீர்கள்" என்று அர்ஷ்தீப் சிங்கின் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார், இது அர்ஷ்தீப் சிங்கை ட்ரோல் செய்த நெட்டிசன்களுக்கு பாடம் எடுப்பது போல் அமைந்துள்ளதாக கருத்துகள் எழுந்து வருகின்றன.
பாகிஸ்தானுக்கு எதிராக முக்கியமான கட்டத்தில் மிக எளிதான கேட்சை விட்டார், இம்மாதிரி கேட்சை விடுவதெல்லாம் கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்தே இருப்பதுதான், ஆட்டத்தின் அழுத்தம், நெருக்கடிகளில் இப்படி நடப்பதுண்டு, இது டென்னிஸில் சொல்லப்படுவது போல் ‘அன்ஃபோர்ஸ்டு எரர்’ அறியாமல் செய்த பிழை என்று கருதுவதே விவேகம்.
ஆனால் கிரிக்கெட்டை விளையாட்டைத் தாண்டிய விஷயமாக பார்ப்பவர்களுக்கு, அதுவும் பாகிஸ்தான் வெற்றி பெற்றதைப் பார்ப்பவர்களுக்கு, அர்ஷ்தீப் சிங் ஒரு கிள்ளுக்கீரையாகி விட்டார் நேற்று. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, அர்ஷ்தீப் சிங்கை ஆதரித்து பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் டைம்ஸ் நவ் இணையதளத்தில் ஷமி கூறும்போது, “அவர்கள் வாழ்வதே நம்மை ட்ரோல் செய்வதற்காகத்தான். வேற வேலை இல்லை அவர்களுக்கு. நன்றாக ஆடினாலோ, நல்ல கேட்ச் எடுத்தாலோ பாராட்ட மாட்டார்கள். ஆனால் ட்ரோல் செய்ய மட்டும் வந்து விடுவார்கள்.
Also Read: ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்
உங்களுக்குத் தைரியம் இருந்தால் உண்மையான பெயர்களில் கணக்குத் தொடங்கி அவதூறு செய்து பாருங்கள். போலி சமூக ஊடகப் பக்கங்களிலிருந்து யார் வேண்டுமானாலும் அவதூறு செய்ய முடியும். நானும் இதனைச் சந்தித்தேன், ஆனால் மனம் துவளவில்லை, காரணம் எனக்கு ஆதரவாக நாடே இருந்தது. ஆகவே அர்ஷ்தீப் இது உன்னை பாதித்து விடக் கூடாது, உன்னிடம் அளப்பரிய திறமை உள்ளது” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.