முகப்பு /செய்தி /விளையாட்டு / ஜஸ்பிரித் பும்ராவுக்கு நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை… உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் சந்தேகம்

ஜஸ்பிரித் பும்ராவுக்கு நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை… உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் சந்தேகம்

பும்ரா

பும்ரா

கடைசியாக பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த டி20 போட்டிகளில் பங்கேற்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஜஸ்பிரித் பும்ராவுக்கு நியூசிலாந்தில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் அவர் மைதானத்திற்கு திரும்ப மேலும் சில நாட்களாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக கடந்த 6 மாதங்களுககும் மேலாக விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார். அவருக்கு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், முதுகில் பும்ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பும்ரா இல்லாத சூழலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு டிபார்ட்மென்ட் சற்று பலவீனமாகவே காணப்படுகிறது. ஷமி, சிராஜ், உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்தாலும், பும்ராவுக்கு மாற்று வீரர் என்ற யாரும் இன்னும் கிடைக்கவில்லை. அணியில் அவர் இடம்பெற்றால் அது கூடுதல் பலமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பும்ராவுக்கு மேலும் ஒரு அறுவை சிகிச்சை நியூசிலாந்தில் நடைபெறும் என்று தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. இம்மாத இறுதியில் இந்த அறுவை சிகிச்சை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூடுதல் சிகிச்சையை பும்ரா மேற்கொள்ளவுள்ளதால் இதிலிருந்து குணம் அடைவதற்கு மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக பும்ரா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த டி20 போட்டிகளில் பங்கேற்றார். இந்தாண்டு இறுதியில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில்  அதில் பும்ரா இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பும்ரா முழு உடல் தகுதி பெற்றால் மட்டுமே அணியில் இடம்பெறுவார் என்று கூறியுள்ளார். மேலும், அவசர கதியில் அவர் அணியில் ஒருபோதும் சேர்க்கப்பட மாட்டார் என்றும் தெரிவித்திருக்கிறார்.

First published:

Tags: Cricket