முகப்பு /செய்தி /விளையாட்டு / ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாத பும்ரா… ஐபிஎல்-இல் நேரடியாக விளையாடுவார் என தகவல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாத பும்ரா… ஐபிஎல்-இல் நேரடியாக விளையாடுவார் என தகவல்

ஜஸ்பிரித் பும்ரா

ஜஸ்பிரித் பும்ரா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இந்தாண்டு இறுதியில் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகிய முக்கிய ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பெயர் இடம்பெறவில்லை. அவர் நேரடியாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5 மாதங்களாக பும்ரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகிறார். கடைசியாக அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம்தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்றார். காயம் காரணமாக பும்ரா சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் உடல் தகுதி பெறாமல் உள்ளார். பெங்களூருவில் ஒரு சில பயிற்சி ஆட்டங்களில் பும்ரா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதம் உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் பும்ராவின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேரடியாக பும்ரா களம் இறங்குவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பும்ரா விளையாடி வருகிறார். அவரை ரூ. 12 கோடிக்கு மும்பை அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இந்தாண்டு இறுதியில் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகிய முக்கிய ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் வகையில் முழு உடல் தகுதியை பும்ரா பெற்று வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பும்ரா அணியில் இல்லாத சூழலிலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் அதிகம் காணப்படுகிறது. இவ்விரு போட்டிகளிலும் மொத்தம் இருந்த 40 விக்கெட்டுகளில், 32 விக்கெட்டை சுழற்பந்து வீச்சாளர்களே கைப்பற்றியுள்ளனர்.

First published:

Tags: Cricket