Home /News /sports /

இந்தியர்களின் பணத்தில் நடக்கிறதா பாகிஸ்தான் கிரிக்கெட்?- கிளம்பியுள்ள புதிர் தகவல்கள்

இந்தியர்களின் பணத்தில் நடக்கிறதா பாகிஸ்தான் கிரிக்கெட்?- கிளம்பியுள்ள புதிர் தகவல்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட்

கிரிக்கெட்டில், அரசியலில் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரிகளாக இருக்கலாம். ஆனால், பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பிஎஸ்எல் தொடரே பெரும்பகுதி இந்திய பணத்தினால்தான் நடக்கிறது என்ற பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் இருதரப்பு கிரிக்கெட் உறவை துண்டித்துவிட்டன. முக்கிய ஐசிசி தொடர்கலில் இரு அணிகளும் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடினாலும், இருநாடுகளுக்கு இடையிலான அரசியல் மற்றும் ராஜீய உறவுகள், எல்லை தாண்டிய பதட்டங்கள் இருதரப்பு கிரிக்கெட் உறவுகளில் இருநாடுகளும் ஈடுபடுவதைத் தடுக்கின்றன, .

இருப்பினும், இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் என்று வரும்போது, ​​இருவருக்கும் இடையே பொதுவான ஒன்று இருப்பதாகவும், அது இந்திய ரூபாயாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தியப் பணத்தின் பெரும்பகுதி பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு உதவிகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் புதிய செய்தி அறிக்கை இது தொடர்பான கூடுதல் விவரங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் எழுந்த பகீர் தகவல்களின் படி இந்திய சூதாட்ட நிறுவனமான Sky247 என்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஸ்பான்சர்களில் ஒன்று என்பதோடு பாகிஸ்தான் தனியார் டி20 லீகான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான பெரும்பான்மையான ஸ்பான்சராக விளங்குகிறது. அதாவது இந்தியாவில் பெருகும் அதன் வருவாய் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முதலீடு செய்யப்படுவதாக அந்த செய்தி அறிக்கை கூறுகிறது.

இந்த சூதாட்ட தளத்துக்கு கிடைக்கும் 70 சதவீதம் வருமான இந்தியர்கள் மூலம்தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூதாட்ட தளம்தான் பாகிஸ்தான் சூப்பர் லீக்கையே நடத்துகிறது. ஏறக்குறைய 3.30 கோடிடாலர் அதாவது ரூ2,640 கோடி மதிப்புள்ள இந்தியப் பணம் பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் புரள்கிறது.

தவிர, கடந்த ஆண்டு அபுதாபியில் நடந்த பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டி20ஐ தொடருக்கும் நிதியளித்தது. மேலும், நிறுவனம் லங்கா பிரீமியர் லீக் (LPL) மற்றும் UAE-அயர்லாந்து T20I களுக்கு நிதியுதவி செய்துள்ளது, மேலும் சில T20 மற்றும் T10 போட்டிகளுக்கு நிதியுதவி அளித்துள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டு இந்தியாவின் இலங்கை சுற்றுப்பயணத்திற்கும் ஸ்பான்சர் வழங்கியது.

இந்தியாவில் சூதாட்டப் பந்தயம் கட்டுவதை தடுக்க இந்திய போலீசார் கடுமையாக முயன்று வருகிறார்கள் ஆனால் ஆன்லைன் பந்தயத்தை நிறுத்துவதில் சவால்கள் அதிகம் ஏனெனில் இந்தியாவில் ஆன்லைன் பந்தயம் கட்டும் தளங்களைத் தடை செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டில் இந்திய அரசைக் கேட்டுக் கொண்டது, அந்த தளங்கள் வெளிநாட்டில் இருந்து இயக்கப்பட்டதால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில், சமீபத்தில், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சில கிரிக்கெட் பந்தய நெட்வொர்க்குகள் ராஜஸ்தானில் இருந்து இயக்கப்படுவதாகவும் பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும் விசாரணை நடத்தியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் ஸ்கை247.நெட் நிறுவனம் அபுதாபியில் இந்த மாதக் கடைசியில் நடக்கும் ஐஐஎப்ஏ சினிமா விருதுகளுக்கும் ஸ்பான்ஸர் செய்ய இருக்கிறது என்பது கூடுதல் தகவல். இந்தியர்கள் பணத்தில் முதலீட்டில் நடத்தப்படும் ஸ்கை247.நெட் நிறுவனம் மாதந்தோறும் நூற்றுக்கணக்கான கோடிகளை ஈட்டி வருகிறது இந்தப் பணத்தை பாகிஸ்தானில் முதலீடு செய்கிறது, அதுவும் கிரிக்கெட்டில் என்பதுதான் இப்போதைய பிரச்சனை.
Published by:Muthukumar
First published:

Tags: Pakistan cricket, Pakistan News in Tamil

அடுத்த செய்தி