Home /News /sports /

ஷேன் வார்ன் குறித்த கவாஸ்கர் கருத்து; ஆஸி. ஊடகங்கள் சாடலுக்குப் பிறகு வருத்தம்

ஷேன் வார்ன் குறித்த கவாஸ்கர் கருத்து; ஆஸி. ஊடகங்கள் சாடலுக்குப் பிறகு வருத்தம்

sunil gavaskar

sunil gavaskar

சுனில் கவாஸ்கர், மறைந்த ஷேன் வார்னை எல்லா காலத்திலும் சிறந்த பவுலர் என்று அழைக்க மறுத்ததற்கு வருத்தம் தெரிவித்தார், அவர் செய்த ஒப்பீடுகளுக்கு இது சரியான நேரம் அல்ல என்றும் ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்த பிறகு சுனில் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    சுனில் கவாஸ்கர், மறைந்த ஷேன் வார்னை எல்லா காலத்திலும் சிறந்த பவுலர் என்று அழைக்க மறுத்ததற்கு வருத்தம் தெரிவித்தார், அவர் செய்த ஒப்பீடுகளுக்கு இது சரியான நேரம் அல்ல என்றும் ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்த பிறகு சுனில் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

    ஷேன் வார்ன் தனது அனைத்துக் கால சிறந்த பேட்டர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கரை சேர்த்ததில்லை, இது கவாஸ்கருக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். மேலும் ஆஸ்திரேலியர்கள் மீது கவாஸ்கருக்கு எப்போதும் ஒரு காழ்ப்பு உண்டு, காரணம் அந்த அணி நடந்து கொள்ளும் விதம்தான்.

    இந்நிலையில் ஷேன் வார்ன் இறந்த பிறகு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தும், பவுலிங்கிலும் ஒன்றும் கிரேட் இல்லை என்றும் கவாஸ்கர் கூறியது இந்திய ரசிகர்களின் கண்டனங்களையே கிளப்பியது. இதோடு ஆஸ்திரேலிய ஊடகங்களும் கவாஸ்கர் விமர்சனத்தின் கால நேரம் பற்றி கண்டனங்களை எழுப்பியிருந்தன.



    சுருக்கமாக 145 டெஸ்ட்களில் 708 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்னை கிரேட் பவுலர் இல்லை என்று கூறுவது அசட்டுத் தைரியமும், உலக கருத்துக்கு எதிராக ஒரு மல்லுக்கட்டு கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற தேவையின் காரணமாகவும் இருக்கலாம்.

    இந்நிலையில் தன் கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், கவாஸ்கர் கூறும்போது, “பின்னோக்கிப் பார்த்தால், அந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கக் கூடாது, எந்த ஒப்பீடு அல்லது மதிப்பீட்டிற்கும் இது சரியான நேரம் அல்ல என்பதால் நான் பதில் சொல்லியிருக்கக் கூடாது" என்று கவாஸ்கர் தனது அறிக்கையை விமர்சித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக வார்ன் பற்றிய கேள்விக்கு கவாஸ்கர் கூறி கடும் விமர்சனங்களுக்கு ஆளான கருத்து இதுதான்:

    “டிவியில், வார்ன் சிறந்த ஸ்பின்னரா என்று ஒரு தொகுப்பாளர் என்னிடம் கேட்டார், நான் எனது நேர்மையான கருத்தை தெரிவித்தேன். வார்ன் "மேஜிக் டெலிவரிகளை" வீசிய போதும் இந்த ஸ்பின் கலையில் அவர் கடினமாகத் தேர்ச்சி பெற்றாலும், இந்தியாவில் அவரது செயல்திறன் "மிகவும் சாதாரணமானது" என்பதால் அவர் எல்லா காலத்திலும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் அல்ல.

    இந்தியாவுக்கு எதிராக முத்தையா முரளிதரன் பெற்ற பெரிய சக்சஸ் காரணமாக, எனது புத்தகத்தில் வார்னை விட முரளிதரன் தான் ஆல் டைம் கிரேட் என்று தரவரிசைப்படுத்துவேன்,” என்று கவாஸ்கர் முன்பு கூறியிருந்தார், இது மோசமானதாக விமர்சிக்கப்பட்டது.

    இந்நிலையில்தான் விமர்சனச் சூடு தாங்காமல் கவாஸ்கர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Shane Warne

    அடுத்த செய்தி