• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • 2025-ல் நடக்கப் போற தொடருக்கு இப்பவே ஆரம்பிச்சுட்டாங்கப்பா?- இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

2025-ல் நடக்கப் போற தொடருக்கு இப்பவே ஆரம்பிச்சுட்டாங்கப்பா?- இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

இந்தியா-பாகிஸ்தன்

இந்தியா-பாகிஸ்தன்

  • Share this:
    2025-ம் ஆண்டு நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்த ஐசிசி அனுமதித்துள்ளது. இன்னும் 4 வருஷம் இருக்கு. அதற்குள்ளாகவே ஆரம்பித்து விட்டார்கள் பாகிஸ்தான் செல்லலாமா வேண்டாமா, பாதுகாப்பு இருக்குமா இருக்காதா என்ற விவாதங்களை தொடங்கி விட்டனர்.

    மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதனன்று கூறும்போது, அந்த சமயத்தில் பாகிஸ்தானில் பாதுகாப்பு அம்சங்கள் எப்படி இருக்கிறது என்பதை அரசு மதிப்பாய்வு செய்து இந்திய அணி செல்லுமா செல்லாதா என்பதை முடிவெடுப்பார்கள் என்றார்.

    அனுராக் தாக்கூர் இது பற்றி கூறும்போது, “கடந்த காலத்தில் கூட பல நாடுகள் பாகிஸ்தான் செல்லாமல் தொடரிலிருந்து விலகியுள்ளன. ஏனெனில் அங்கு சூழ்நிலை நார்மலாக இல்லை. இயல்பு நிலையில் இல்லை. பாதுகாப்பு அங்கு பெரும் பிரச்சனை. அணிகள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இது கவலைக்குரியது. எனவே நேரம் வரும்போது சூழ்நிலைகளைக் கணித்து இந்திய அரசு முடிவெடுக்கும்” என்று அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

    2008 ஆசியக் கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தானில் இந்திய அணி விளையாடவில்லை. 2005-06-ல் ராகுல் திராவிட் தலைமையில் கிரெக் சாப்பல் கோச் ஆக இருந்த போது இந்திய அணி கடைசியாக பாகிஸ்தானில் சென்று ஆடியது. 3 டெஸ்ட் 5 ஒருநாள் போட்டிகளில் ஆடியது. 2007-08-ல் பாகிஸ்தான் இங்கு வந்தது, பிறகு இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடுகள், மோதல் காரணமாக 2012-13-ல் ஒரே ஒரு இருதரப்பு தொடரில் பாகிஸ்தான் இங்கு வந்து ஆடியது.

    அதன் பிறகு 2011 உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு செமிபைனல் ஆட இந்தியா வந்த பாகிஸ்தான், பிறகு 2016 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆட மீண்டும் வந்தது.

    ஐசிசி கிரிக்கெட் அட்டவணை

    1. 2024 டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ்

    2. 2025 சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான்

    3. 2026 டி20 உலகக் கோப்பை: இந்தியா, இலங்கை

    4. 2027 ஒரு நாள் உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா

    5. 2028 டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து

    6. 2029 சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா

    7. 2030 டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து

    8. 2031 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியா, பங்களாதேஷ்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: