ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா- பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி சொல்வது என்ன?

இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா- பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி சொல்வது என்ன?

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி - ஜெய் ஷா

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி - ஜெய் ஷா

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் நடைபெறும் நிலையில் இந்திய அணி அங்கு செல்லாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்வது தொடர்பாக மத்திய அரசிடம் இன்னும் பேச்சுவார்த்தையே தொடங்கவில்லை என பிசிசிஐயின் புதிய தலைவர் ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.

  பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் நடைபெறும் நிலையில் இந்திய அணி அங்கு செல்லாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, பாகிஸ்தானுக்குச் செல்லவேண்டுமா கூடாதா என முடிவெடுக்கவேண்டியது மத்திய அரசுதான் எனவும் மத்திய அரசின் ஒப்புதல் இருந்தால்தான் இந்திய அணியால் எந்தவொரு நாட்டுக்கும் செல்லமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

  Also Read : பிசிசிஐ ஒரு.... பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் அஃப்ரிடி காட்டமான பதிவு

  ரோஜர் பின்னி கடந்த செவ்வாய்கிழமை (அக்டோபர் 18) ஆம் தேதி தான் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Asia cup, BCCI, India vs Pakistan, Indian cricket team