கவுதம் கம்பீரின் கிரிக்கெட் பயணம்: முக்கியமான நிகழ்வுகளின் தொகுப்பு!
Indian former Opener #GautamGambhir Cricket Journey | 2007 டி-20 உலகக் கோப்பை மற்றும் 2011-ல் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் கம்பீர்.
news18
Updated: December 5, 2018, 5:40 PM IST
news18
Updated: December 5, 2018, 5:40 PM IST
கனத்த இதயத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் கெளவ்தம் கம்பீர். இந்திய அணியின் தொடக்க வீரர், சிறந்த இடது கை ஆட்டக்காரர், முக்கியமான போட்டிகளில் ஆபத்பாண்டவர், இருமுறை ஐ.பி.எல். கோப்பையை முத்தமிட்ட கேப்டன் என பல சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
சச்சின் - சேவாக் என்ற ஜாம்பவான் இணை சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய 2003-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார் கவுதம் கம்பீர். இவரது ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்க்கை சற்று சிரமமாகவே இருந்தது. சச்சின், சேவாக் என இருவரில் ஒருவர் இல்லாத சமயத்தில்தான் கம்பீருக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்தி கொண்ட கம்பீர் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் இடது கை ஆட்டக்காரராக இருந்ததால், கங்குலியைப் போலவே சிறந்த வீரராவார் என கணிக்கப்பட்டது. அந்தக் கணிப்பை பொய்யாக்காத கம்பீர், விரைவிலேயே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஆனார்.
இந்தியாவுக்காக 242 போட்டிகளில் ஆடிய கம்பீர், 10,324 ரன்களை எடுத்துள்ளார். ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் அவர் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். 2009-ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் தோனி தலைமையிலான இந்திய அணி முதலிடம் பிடித்தது. இதற்கு முக்கியக் காரணகர்த்தா கம்பீர். அந்த ஆண்டில் மட்டும் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் சதங்களை விளாசியிருந்தார். இதற்காக அவருக்கு ஐசிசியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் விருது வழங்கப்பட்டது.

2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய கம்பீர் 150 ரன்கள் விளாசினார். அதே போட்டியில்தான் ஒருநாள் தொடரில் தனது முதல் சதத்தை கோலி பதிவு செய்தார். அவரை ஊக்குவிக்கும் விதமாக தான் வாங்கிய ஆட்டநாயகன் விருதை கோலிக்கு வழங்கினார் கம்பீர். அவரது இந்தச் செயலை பலரும் பாராட்டினர்.
2008-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் தொடங்கப்பட்டபோது, டெல்லி அணிக்காக களம் கண்ட கம்பீர், 2011-ல் கொல்கத்தா அணிக்காக விளையாடத் தொடங்கினார். அஃப்ரிடிக்கு எதிராக களத்தில் அவர் முறைத்த போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 2012-ம் ஆண்டுக்குப் பின்னர், அவர் சறுக்கலை சந்திக்கத் தொடங்கினார். தேசிய அணிக்கு வருவதும் போவதுமாக இருந்தார்.

2016-ம் ஆண்டுக்குப் பிறகு அந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்காமலேயே போனது. ஐ.பி.எல். தொடரிலும் சோபிக்கத் தவறிய அவர், கொல்கத்தாவில் இருந்து கழற்றிவிடப்பட்டார். பின்னர் டெல்லி அணிக்காக கடந்த சீசனில் விளையாடிய அவர், லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

2019 ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். இந்த நிலையில்தான், கம்பீர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை (09.12.18), ஆந்திராவுக்கு எதிராக விளையாடப் போகும் ரஞ்சி போட்டியே தனது கடைசி போட்டி என்று கம்பீர் அறிவித்தார்.
2007-ம் ஆண்டு நடந்த டி-20 உலகக் கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் கம்பீர் . கம்பீர் இல்லையென்றால் அந்த உலகக்கோப்பைகள் நமக்கு கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை...
Also Watch...

சதமடித்த மகிழ்ச்சியில் கம்பீர் (BCCI)

டெஸ்டில் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் கம்பீர் (BCCI)
2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய கம்பீர் 150 ரன்கள் விளாசினார். அதே போட்டியில்தான் ஒருநாள் தொடரில் தனது முதல் சதத்தை கோலி பதிவு செய்தார். அவரை ஊக்குவிக்கும் விதமாக தான் வாங்கிய ஆட்டநாயகன் விருதை கோலிக்கு வழங்கினார் கம்பீர். அவரது இந்தச் செயலை பலரும் பாராட்டினர்.
Loading...Happy retirement, @GautamGambhir!
Never forget his 9⃣7⃣ in the 2011 World Cup Final! 👏 pic.twitter.com/bVTEqgB7t8
— Cricket World Cup (@cricketworldcup) December 5, 2018
2008-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் தொடங்கப்பட்டபோது, டெல்லி அணிக்காக களம் கண்ட கம்பீர், 2011-ல் கொல்கத்தா அணிக்காக விளையாடத் தொடங்கினார். அஃப்ரிடிக்கு எதிராக களத்தில் அவர் முறைத்த போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 2012-ம் ஆண்டுக்குப் பின்னர், அவர் சறுக்கலை சந்திக்கத் தொடங்கினார். தேசிய அணிக்கு வருவதும் போவதுமாக இருந்தார்.

பயிற்சி செய்ய செல்லும் கம்பீர் (BCCI)
2016-ம் ஆண்டுக்குப் பிறகு அந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்காமலேயே போனது. ஐ.பி.எல். தொடரிலும் சோபிக்கத் தவறிய அவர், கொல்கத்தாவில் இருந்து கழற்றிவிடப்பட்டார். பின்னர் டெல்லி அணிக்காக கடந்த சீசனில் விளையாடிய அவர், லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

டெல்லி அணியுடன் கவுதம் கம்பீர் (BCCI)

Loading...