#FIFARanking: முதல் 100 இடங்களைவிட்டு வெளியேறியது இந்தியா!

#Indianfootballteam slips out of top 100 | ஆசிய அளவில் இந்திய கால்பந்து அணி 18-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. #FIFARanking

news18
Updated: February 7, 2019, 6:42 PM IST
#FIFARanking: முதல் 100 இடங்களைவிட்டு வெளியேறியது இந்தியா!
இந்திய கால்பந்து அணி. (Twitter/Indian Football Team)
news18
Updated: February 7, 2019, 6:42 PM IST
ஆசியக் கோப்பை தொடரில் இந்திய கால்பந்து அணியின் மோசமான ஆட்டத்தால் சர்வதேச தரவரிசையில் முதல் 100 இடங்களைவிட்டு வெளியேறியது.

சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி, கடந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால், 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிட்ட தரவரிசையில் 97-வது இடத்தைப் பிடித்து அசத்தியது.

அண்மையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. இதில், இந்திய அணி தனது முதல் போட்டியில் தாய்லாந்து அணி 4-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. ஆனால், அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது.

Indian Football Team, இந்திய கால்பந்து அணி.
முதல் லீக் போட்டியில் இந்திய கால்பந்து அணி. (AFC Media)


இந்திய அணி ‘நாக் அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில், சர்வதேச கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை பிபா வெளியிட்டுள்ளது. ஆசியக் கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணி முதல் 100 இடங்களுக்குள் வரவில்லை.

இந்திய அணி, 97-வது இடத்தில் இருந்து 6 இடங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு 103-வது இடத்தைப் பிடித்துள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் பிரேசில் அணிகள் முதல் 3 இடங்களில் நீடிக்கின்றன.

சுனில் சேத்ரி, Sunil Chhetri
சுனில் சேத்ரி. (Twitter/Indian Football Team)


ஆசியக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற கத்தார் அணி, 38 இடங்களில் முன்னேறி 55-வது இடத்தில் உள்ளது. அரையிறுதி வரை சென்ற ஈரான் அணி 7 இடங்கள் முன்னேறி 22-வது இடத்தில் உள்ளது. ஆசிய அளவில் முதல் இடத்தில் அந்த அணி இருக்கிறது. ஆசிய அளவில் இந்திய கால்பந்து அணி 18-வது இடத்தில் உள்ளது.

Also Watch...

First published: February 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...