ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Video: ரிஷப் பண்ட்-ஐ புகழ்ந்து பாடி அசத்திய இந்திய ரசிகர்கள்

Video: ரிஷப் பண்ட்-ஐ புகழ்ந்து பாடி அசத்திய இந்திய ரசிகர்கள்

இந்திய அணிக்கு உற்சாகம் தரும் வகையில் ‘பாரத் ஆர்மி’ என்ற பெயரில் ரசிகர்கள் ஆஸ்திரேலியாவில் களமிறங்கியுள்ளனர்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணி சார்பில் புஜாரா 193 ரன்களையும், ரிஷப் பண்ட் 159 ரன்களையும் எடுத்தனர். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர், வெளிநாட்டு மண்ணில் 150 ரன்களுக்கு மேல் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என பல சாதனைகளை ரிஷப் பண்ட் படைத்தார்.

(Photo: BCCI)

இந்திய அணிக்கு உற்சாகம் தரும் வகையில் ‘பாரத் ஆர்மி’ என்ற பெயரில் ரசிகர்கள் ஆஸ்திரேலியாவில் களமிறங்கியுள்ளனர். பாட்டு பாடி ரசிகர்கள் மற்றும் வீரர்களை அவர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் ரிஷப் பண்ட்டின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டி பாட்டு ஒன்று பாடி அரங்கத்தை அதிர வைத்தனர்

We’ve got Pant

Rishab Pant

I just don’t think you’ll understand

He’ll hit you for a six

He’ll babysit your kids

We’ve got Rishab Pant

என்று ரிஷப் பன்டை புகழ்ந்து அவர்கள் பாடிய பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

also see:  ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ருசிகர கறி விருந்து

Published by:Prabhu Venkat
First published:

Tags: INDvAUS, Rishabh pant, Sydney