• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளைத் தவிர்க்கலாம்..! - கபில்தேவ் அறிவுறுத்தியது ஏன்?

இந்திய வீரர்கள் ஐபிஎல் போட்டிகளைத் தவிர்க்கலாம்..! - கபில்தேவ் அறிவுறுத்தியது ஏன்?

கபில் தேவ்

கபில் தேவ்

  • Share this:
    சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதில் நெருக்கடி ஏற்படும் என்றால், இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் போட்டிகளைத் தவிர்க்கலாம் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுரை வழங்கியுள்ளார்.

    நியூசிலாந்து தொடரை முடித்தவுடன், நேரடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்க வேண்டியிருக்கும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கபில்தேவ், ”தங்கள் நாட்டுக்காக விளையாடும்போது, வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார். ஐபிஎல் அணிக்காக விளையாடுகிறோம் என்பதற்காக தேசிய அணியில் திறமையை வெளிப்படுத்துவதில் சமரசம் செய்துவிடக்கூடாது” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: