ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை கண்டு ரசித்த இந்திய கிரிக்கெட் அணி… ஃபோட்டோஸ் வைரல்…

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை கண்டு ரசித்த இந்திய கிரிக்கெட் அணி… ஃபோட்டோஸ் வைரல்…

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய வீரர்கள் கால்பந்தாட்ட போட்டியை ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கும் புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் ஃபைனல் மேட்ச்சை, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் திரையில் கண்டு ரசித்தனர். இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

கோடிக்கணக்கான கால்பந்தாட்ட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நேற்று நடந்தது. இதில் அர்ஜென்டினா - பிரான்ஸ் அணிகள் மோதின.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் முதலில் 2 – 2 என டையில் முடிந்தது. கூடுதலாக அளிக்கப்பட்ட 30 நிமிடங்களில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து 3 - 3 என சமநிலை பெற்றன. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் பெனால்டி ஷூட் அவுட் நடத்தப்பட்டது.

இதில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறந்த வீரருக்கான விருதை அர்ஜென்டினாவின் மெஸ்ஸியும், கோல்டன் க்ளோஸ் எனப்படும் தங்க கையுறை விருதை, அர்ஜென்டினாவின் கோல்கீப்பர் ஏமிலியனோ மார்ட்டினஸும் பெற்றுக்கொண்டனர்.

WATCH – உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப்போட்டியின் ஹைலைட்ஸ்…

தங்க காலணி விருது பிரான்ஸ் அணியின் எம்பாபேவுக்கு வழங்கப்பட்டது. இந்த போட்டியை வங்கதேசத்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஒன்றாக அமர்ந்து திரையில் பார்த்து ரசித்தனர். இந்திய வீரர்கள் கால்பந்தாட்ட போட்டியை ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கும் புகைப்படங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன. வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், வரும் வியாழன் அன்று 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

பரிசளிப்பு விழாவில் அருவருப்பாக நடந்துகொண்ட அர்ஜென்டினா கோல்கீப்பர்… சோஷியல் மீடியாவில் வலுக்கும் கண்டனம்

இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையே காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட்ட கேப்டன் ரோகித் சர்மா, இரண்டாவது போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

First published:

Tags: FIFA World Cup 2022, Indian cricket team