• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வீரர்கள் மனைவியை அழைத்து வருவதால் தலைவலி: பிசிசிஐ அதிருப்தி

வீரர்கள் மனைவியை அழைத்து வருவதால் தலைவலி: பிசிசிஐ அதிருப்தி

ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலியுடன் அனுஷ்கா சர்மா. (Twitter)

ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலியுடன் அனுஷ்கா சர்மா. (Twitter)

Indian Cricketers Touring with families a 'headache' for #BCCI | ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணத்தின்போது வீரர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர்கள் என கிட்டத்தட்ட 40 பேர் வந்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து வருவதால் பிசிசிஐ அதிருப்தியில் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின்போது தங்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து வருவது காலங்காலமாக இருந்துவரும் ஒன்றுதான். பிசிசிஐ, வீரர்களிடம் மனைவி மற்றும் காதலியை அழைத்துவரக் கூடாது என்று சொல்வதும், பின்னர் அழைத்து வரலாம் என்று சொல்வதும் வழக்கமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.

Anushka, அனுஷ்கா
மெல்போர்னில் போட்டி முடிந்த பின்பு, விராட் கோலி உடன் சிட்னிக்கு சென்ற அனுஷ்கா. (Twitter/Anushka Sharma)


அண்மையில், இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது, இந்தப் பிரச்னை அதிகமாகியுள்ளது. வீரர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர்கள் என கிட்டத்தட்ட 40 பேர் வந்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடு செய்வது, பாதுகாப்பு அளிப்பது, பேருந்து வசதி கொடுப்பது என பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு பேருந்துகள் பயன்படுத்தியும் சமாளிக்க முடியாமல் பிசிசிஐ நிர்வாகிகள் திணறியுள்ளனர்.

Virat Kolhi, Anushka Sharma, விராட் கோலி, அனுஷ்கா சர்மா
ஆஸ்திரேலியாவில் டென்னிஸ் மைதானத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா. (Twitter)


வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இரண்டு வாரங்களுக்கு வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைத்துக்கொள்ளலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க தனியே நேரம் ஒதுக்கப்படுகிறது.

இருப்பினும், கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலருடன் வெளிநாடுகளுக்கு வந்தால் ஏற்பாடுகளை எளிதாக செய்துவிடலாம். ஆனால் அதிக எண்ணிக்கையில் வரும்போது சமாளிப்பது கடினம் என்றும், பணம் செலவளிப்பது பற்றி கவலை இல்லை என்று பிசிசிஐ தரப்பில் கூறப்படுகிறது.

கடைசி போட்டியில் படுதோல்வி... ஆனாலும் கோப்பை நமக்குதான்...!

Also Watch...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesan L
First published: