Home /News /sports /

ஜிம்பாப்வே அணியை வென்ற மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட இந்திய அணி - வைரல் வீடியோ

ஜிம்பாப்வே அணியை வென்ற மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட இந்திய அணி - வைரல் வீடியோ

மகிழ்ச்சியில் இந்திய அணி

மகிழ்ச்சியில் இந்திய அணி

ஜிம்பாப்வேவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய அணி தொடரை 3-0 என்று வென்று ஒயிட் வாஷ் செய்தது. இந்திய அணி தங்கள் வெற்றியை கொண்டாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
ஜிம்பாப்வேவிற்கு பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு சென்று ஒருநாள் போட்டிகளில் ஆடி 3 போட்டிகளிலும் வென்றது. தொடரை 3-0 என்று வென்று ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி. இதை தொடர்ந்து இந்திய அணி தங்கள் வெற்றியை கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

ஷுப்மன் கில் அதியற்புதமாக ஆடி ஆட்ட நாயகன் தொடர் நாயகன் விருதுகளைத் தட்டிச் சென்றார். ஷுப்மன் கில்லின் இன்னிங்ஸ் ஒரு ஃபர்ஸ்ட் கிளாஸ் ரகமாக இருந்தது. மூன்றாவது போட்டியில் 82 பந்துகளில் சதம் அடித்து கடைசியில் 130 ரன்களை 3வது போட்டியில் எடுத்தார் ஷுப்மன் கில்.

முதல் போட்டியில் 10 விக்கெட்டுகளில் வென்ற இந்திய அணி 2வது போட்டியில் சற்று திணறியது. முதல் இரண்டு போட்டியில் 200 ரன்களை கூட ஜிம்பாவே அணியை எட்ட விடாமல் செய்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் 289 ரன்களை எடுத்து ஜிம்பாவேவிற்கு 290 ரன்களை இலக்காக கொடுத்தது. அந்த அணியின் இவான்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்தியாவை 300 ரன்களை எட்ட விடாமல் செய்தார். மிக நெருக்கமாக சென்றாலும், மூன்றாவது போட்டியில் இந்தியாவே மீண்டும் வெற்றி பெற்றது.



 




View this post on Instagram





 

A post shared by Shikhar Dhawan (@shikhardofficial)






இந்த நிலையில் நேற்று போட்டி முடிந்ததும் வெற்றியயை கொண்டாடும் விதமாக இந்திய அணி வீரர்கள் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். இந்த வீடியோவை ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை பதிவிட்ட அவர், “இப்படி தான் நாங்கள் எங்களின் வெற்றியை கொண்டாடுவோம்” என தலைப்பிட்டுள்ளார்.

இதற்கு மேற்கிந்திய ஜாம்பவான், பிரைன் லாரா “சில வாரங்களுக்கு முன் இதே போல வீரர்கள் இரவெல்லாம் நடனமாடியது என் நினைவுக்கு வருகிறது” என கிண்டலாக பதிவிட்டுள்ளார். மேலும், முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் “எப்போதும் கிரிகெட்டை மறக்காமல் அதனுடனே இருங்கள்” என நகைச்சுவையாகவும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Published by:Raj Kumar
First published:

Tags: Funny men, Indian cricket team, Shikhar dhawan, Zimbabwe

அடுத்த செய்தி