Home /News /sports /

பண்ட், பாண்டியா, ஜடேஜா மிகமிக அபாயக் கூட்டணி - இன்சமாம் உல் ஹக்

பண்ட், பாண்டியா, ஜடேஜா மிகமிக அபாயக் கூட்டணி - இன்சமாம் உல் ஹக்

இன்சமாம் உல் ஹக்

இன்சமாம் உல் ஹக்

ஆசியக் கோப்பை 2022-ன் பிளாக்பஸ்டர் இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வென்றாலும், பார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி அதிருப்தி தரும் வகையில் ஒரு இன்னிங்ஸை ஆடிவிட்டார்,

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    ஆசியக் கோப்பை 2022-ன் பிளாக்பஸ்டர் இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வென்றாலும், பார்முக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி அதிருப்தி தரும் வகையில் ஒரு இன்னிங்ஸை ஆடிவிட்டு 34 பந்துகளில் 35 என்று ஆடிவிட்டு கடைசியில் தூக்கிக் கையில் கொடுத்து விட்டுச் சென்றார்.

    இதுபற்றி பரவலாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  இதில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கும் கருத்து தெரிவித்துள்ளார்: கோலிக்கு அதிக அழுத்தம் இருந்ததை பார்க்க முடிந்தது. நன்கு செட் ஆன ஒரு பேட்டரை தூக்குவது கடினம், ஆனால் விராட் கோலி செட் ஆன பிறகு நம்பிக்கை தரும் வகையில் ஆடவில்லை, தன்னம்பிக்கை இல்லாமல் ஆடினார், அவர் ஆட்டத்தில் உறுதி தெரியவில்லை.

    இந்திய அணியின் மிடில் ஆர்டர், கீழ் மிடில் ஆர்டர் வலுவாக உள்ளது, இதுதான் இந்த ஆசியக் கோப்பையில் இந்தியாவை மற்ற அணிகளிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. ரிஷப் பண்ட்டை பெஞ்சில் அமரவைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை, இது ஒரு பெரிய ஆச்சரியம்.  பண்ட், பாண்டியா, ஜடேஜா மிகமிக அபாயகரமானக் கூட்டணி, இந்தப் பிட்சில் ஓவருக்கு 11 ரன்களை விரட்டுவது கடினம், ஆனால் இந்தியா நன்றாக ஆடினர்.

    Also Read:  இந்தக் கோலியும் ரோஹித் சர்மாவும் இப்படி செய்திருக்கக் கூடாது - சுனில் கவாஸ்கர் விமர்சனம்

    பாகிஸ்தான் தேர்வுக்குழுவினர் 4-ம் நிலைக்கு சிறப்பான ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டும். பகர் ஜமான் அவுட் ஆனால் பிறகு சரிவு ஏற்பட்டு விடுகிறது. எனவே 4, 5-ம் நிலைகளில் திடமான வீரர்கள் தேவை. ஆசிப் அலி, குஷ்தில் ஷா ஆகியோர் கீழ்மிடில் ஆர்டருக்குத்தான் சரிப்பட்டு வருவார்கள்.  இவ்வாறு கூறினார் இன்சமாம்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Asia cup, Asia cup cricket, Virat Kohli

    அடுத்த செய்தி