Home /News /sports /

யுவராஜ் சிங் சாதனை தகர்ப்பு, தோனி சாதனை சமன்: ‘சபாஷ்’ பாண்டியா

யுவராஜ் சிங் சாதனை தகர்ப்பு, தோனி சாதனை சமன்: ‘சபாஷ்’ பாண்டியா

ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா

இந்தியா வீரர் ஹர்திக் பாண்டியா பெருந்தலைகளான தோனி, யுவராஜ் ஆகியோரின் சாதனையைச் செய்து காட்டியுள்ளார்.  

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை 2022 போட்டியில் இந்தியா போராடி வென்றது. ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்ட் அதிரடி, புவனேஷ்வர் குமாரின் பவுலிங், ஜடேஜாவின் முக்கியமான பேட்டிங் பங்களிப்பு இல்லாமல் இந்தியா அன்று வெற்றி பெற வாய்ப்பில்லை, இந்நிலையில் அன்றைய ஹீரோ ஹர்திக் பாண்டியா பெருந்தலைகளின் சாதனையைச் செய்து காட்டியுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று முன்தினம் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி புவனேஷ்வர் குமார்,ஹர்திக் பாண்டியா ஆகியோரது பவுலிங்கில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. பாபர் அசாம் புவனேஷ்வர் குமாரின் ஷார்ட் பிட்ச் பந்தில் கொடியேற்ற ஆவேஷ் கான் கேட்ச் எடுக்க பாகிஸ்தான் அதிலிருந்து மீளவே இல்லை.

இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்திய டாப் ஆர்டர் மீண்டும் சொதப்பியது, விராட் கோலி சில அழகான ஷாட்களை அடித்தாலும் செம தடவு தடவினார் என்பதும் உண்மையே. இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா ஒரு போட்டியில் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை தகர்த்துள்ளார்.

Also Read:  டிவியில் ஹர்திக் பாண்ட்யாவை முத்தமிட்டு இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய ஆப்கன் ரசிகர்கள்…

ஹர்திக் பாண்டியா மூன்று முறையும், யுவராஜ் 2 முறையும் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்துள்ளனர். மேலும், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் (16 - 20) அதிக சிக்சர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற டோனியின் சாதனையையும் இவர் சமன் செய்துள்ளார். அந்தப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா 34 சிக்ஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி 34 சிக்ஸ் அடித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தப்படியாக யுவராஜ் சிங் 31 சிக்ஸ்களுடன் உள்ளார்.
Published by:Ramprasath H
First published:

Tags: Asia cup india, Cricket, Hardik Pandya, India, MS Dhoni

அடுத்த செய்தி