Home /News /sports /

Happy Birthday Ashwin: அஸ்வின் தொடக்க பேட்டராக ஆரம்பித்து உலகத் தரமான ஸ்பின்னர் ஆன கதை

Happy Birthday Ashwin: அஸ்வின் தொடக்க பேட்டராக ஆரம்பித்து உலகத் தரமான ஸ்பின்னர் ஆன கதை

அஸ்வின்

அஸ்வின்

2018-19  தொடரிலும் 2021லும் ஆஸ்திரேலியா மண்ணில் இரண்டு தொடர்களை வென்றதில் அஸ்வினின் பங்கை மறக்க முடியாது, இந்திய உள்நாட்டுத் தொடர்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதற்கு ஒரே காரணம் அஸ்வின் என்றால் மிகையாகாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
உலகின் தலைசிறந்த ஸ்பின்னர்களுள் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இன்று 36வது பிறந்த தினம். விரல்களில் வித்தை காட்டும் ஜால ஸ்பின்னரான அஸ்வின் இதுவரை 86 டெஸ்ட் போட்டிகளில் 442 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

442 விக்கெட்டுகளில் 30 முறை ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை 7 முறை கைப்பற்றிய சாதனைக்குச் சொந்தக்காரர் அஸ்வின். ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டுகள், டி20 சர்வதேச போட்டிகளில் 66 விக்கெட்டுகள்.

உண்மையாகவே கோலிக்குப் பிறகு கேப்டனாக வேண்டியவர், இவர் கேப்டன்சி வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. தினமும் பந்து வீச்சில் ஏதாவது ஒன்றை புதிதாக முயற்சி செய்து தன்னை தொடர்ந்து வளர்ந்து வரும் மாறிவரும் கிரிக்கெட்டுக்கேற்ப புதிதாக வடிவமைத்துக் கொள்பவர்.

இவரது பந்து வீச்சில் சங்கக்காரா நிறைய முறை அவுட் ஆகியுள்ளார், ஸ்டீவ் ஸ்மித் உட்பட நவீன கால கிரேட்கள் அஸ்வின் பவுலிங்கை திருப்திகரமாக ஆடியதில்லை என்பதே உண்மை.
அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஓப்பனிங் பேட்டராகத் தொடங்கினார். மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளராகவே அவர் பந்து வீச்சு தொடக்கம் இருந்தது. அவரது பால்ய பருவ பயிற்சியாளர் சி.கே.விஜய்தான் அஸ்வினை ஆஃப் ஸ்பின்னுக்குக் கொண்டு வந்தது என்று கூறப்படுவதுண்டு.

6 அடி 2 அங்குலத்தில் ஸ்பின் வீசுவதில் கட்டுப்பாடு மிக அவசியம், பிளைட் செய்வது கடினம். ஆனாலும் அனைத்து கடினமான தருணங்களை உழைப்பின் மூலம் கடந்து வந்தவர் அஸ்வின்.  பவுலிங்கோடு அல்லாமல் கீழ்வரிசையில் சிறந்த பேட்டராகவும் அஸ்வின் திகழ்கிறார். 5 டெஸ்ட் சதங்களை எடுத்துள்ளார், இதுதவிர ஆஸ்திரேலியாவில் ரஹானே கேப்டன்சியில் இந்தியா வென்றபோது சிட்னி ட்ராவை அஸ்வின் இல்லாமல் செய்திருக்க முடியாது. அதுவும் ஹனுமா விஹாரியிடம்   “பத்து பத்து பந்தா ஆடுனா நாப்பது ஓவர்கள் ஆடலாம்” என்று கூறியது அப்போது வைரலானது.

Also Read: ‘இது எனக்கு துக்கமான நாள்’ - ரோஜர் பெடரர் ஓய்வு முடிவுக்காக நடால் வேதனை

அவரது சாதனைகளை வரிசைப்படுத்தினால்,
முதல் போட்டியிலேயே ஆட்ட நாயகன் - அணி மே.இ.தீவுகள்
கபில்தேவுக்குப் பிறகு ஒரு டெஸ்ட்டில் 5 விக்கெட் மற்றும் சதமெடுத்தார்.  66 டெஸ்ட்களில் 350 விக்கெட்டுகளை விரைவில் எடுத்ததில் முத்தையா முரளிதரன் சாதனையுடன் இணைந்தார்.
சர்வதேச டி20 போட்டிகளில் முதலில் 50 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய பவுலர் அஸ்வின் என்ற பொக்கிஷத்தின் பிறந்த தினத்தில் அவரை வாழ்த்துவோம்.

2018-19  தொடரிலும் 2021லும் ஆஸ்திரேலியா மண்ணில் இரண்டு தொடர்களை வென்றதில் அஸ்வினின் பங்கை மறக்க முடியாது, இந்திய உள்நாட்டுத் தொடர்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதற்கு ஒரே காரணம் அஸ்வின் என்றால் மிகையாகாது.
Published by:Ramprasath H
First published:

Tags: Cricketer, R Ashwin

அடுத்த செய்தி