வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை தொடங்கியுள்ளனர்
இந்திய கிரிக்கெட் அணியின் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிந்துள்ளது. இதனை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்து, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
இதையடுத்து வங்கதேசத்துடனான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்து கே.எல். ராகுல் முக்கிய அப்டேட்…
2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மும்பை திரும்பியுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் ரோஹித் சிறிது நாட்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் அடிப்படையில் அவர் முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கே.எல். ராகுல் அணியின் கேப்டனாக வழி நடத்த உள்ளார். துணை கேப்டனாக சித்தேஸ்வர் புஜாரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு இந்திய அணி தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடையும். அதனை கவனத்தில் கொண்டு, இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணி வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இங்கிலாந்து வீரருக்கு ஹேண்ட் ஷேக் செய்ய மறுத்த பாக். பேட்ஸ்மேன் – வைரல் வீடியோ
வங்கதேசத்துடன் ஒப்பிடும் பொழுது இந்திய அணி டெஸ்ட் தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் அந்நாட்டிற்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 227 ரன்கள் என்ற இமாலய வித்தியாசத்துடன் இந்தியா வெற்றி பெற்றது.
இதனால் வலிமையான மனநிலையுடன் இந்திய வீரர்கள் இந்த டெஸ்ட் தொடரை எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian cricket team