• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய கிரிக்கெட் அணி மும்பை குழு, டெல்லி குழு என பிளவுபட்டுள்ளது: பாகிஸ்தான் முன்னாள் ஸ்பின்னர் அதிரடி

இந்திய கிரிக்கெட் அணி மும்பை குழு, டெல்லி குழு என பிளவுபட்டுள்ளது: பாகிஸ்தான் முன்னாள் ஸ்பின்னர் அதிரடி

முஷ்டாக் அகமட்

முஷ்டாக் அகமட்

  • Share this:
    இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான விராட் கோலி விரைவில் டி20 போட்டிகளிலிருந்தே விடைபெறுவார் என்று பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னர் முஷ்டாக் அகமட் ஆரூடம் கூறுகிறார்.

    டி20 உலகக் கோப்பை போட்டியுடன் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா டி20 கேப்டன் பொறுப்பை எடுத்துக் கொண்டுள்ளார், விரைவில் ஒருநாள் அணியையும் ரோகித் சர்மா வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணியில் விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையே கேப்டன்சியில் போட்டி பொறாமை நிலவிவருவதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், போதும் டி20 என்று விராட் கோலி விலகி விடுவார் என்று கூறுகிறார் பாகிஸ்தான் முன்னாள் லெக் ஸ்பின்னர் முஷ்டாக் அகமட்.

    பாகிஸ்தானில் ஒளிபரப்பாகும் ஜியோ சேனலுக்கு முஷ்டாக் அகமது அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ''வெற்றிகரமான கேப்டனாக வலம் வரும் கோலி, கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன் எனக் கூறுவதன் அர்த்தம், அணியின் ஓய்வறையில் ஏதோ சரியில்லை என அர்த்தம். எனக்குத் தெரிந்தவரை, இந்திய ஓய்வறையில் இரு குழுக்கள் இருக்கின்றன. டெல்லி குழு, மும்பைக் குழு எனப் பிரிந்துள்ளன.

    இந்தச் சூழலில், கோலியால் இனிமேல் தொடர்ந்து டி20 போட்டிகளி்ல் விளையாட முடியாது. ஆதலால் டி20 போட்டிகளில் இருந்து கோலி விரைவில் ஓய்வு அறிவிப்பார் என நினைக்கிறேன். இருப்பினும், தொடர்ந்து ஐபிஎல் தொடரில் கோலி விளையாடுவார்.

    ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் அதிகமான ஆர்வம் காட்டியதால்தான், டி20 உலகக் கோ்பபை போட்டியில் கோட்டைவிட்டார்கள். உலகக் கோப்பை போட்டிக்கு முன்புவரை ஓய்வில்லாமல் தொடர்ந்து பயோ பபுள் சூழலில் இந்திய வீரர்கள் இருந்ததால், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சலிப்படைந்து, சோர்வடைந்தது தோல்விக்கு முக்கியக் காரணம்” எனத் தெரிவித்தார் முஷ்டாக் அகமெட்.

    பாகிஸ்தான் அணிக்காக 1989 முதல் 2003 வரை ஆடிய முஷ்டாக் அகமது சிறந்த லெக் ஸ்பின்னர், 52 டெஸ்ட், 144 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அப்துல் காதிர் இடத்தை இவர்தான் இட்டு நிரப்பினார், பிறகு இங்கிலாந்து அணிக்கு ஸ்பின் ஆலோசகராக அவர் இருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: